நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா விசாகன் அம்டெக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி சன்னி போகலாவுடன் இணைந்து ஹூட் என்ற புதிய செயலியை எழுதப்படிக்கத் தெரியாதவர்களும் சமூக வலைதளங்கள் மூலம் மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய விஷயங்கள், கருத்துக்களை அவர்களின் குரலிலேயே பதிவிட்டு தெரிவிக்கும் நோக்கில் வடிவமைத்துள்ளார்.
இதனை நடிகர் ரஜினிகாந்த் தனது குரல் பதிவுடன், டெல்லியில் இருந்தபடியே இந்த செயலியை அறிமுகம் செய்து வைத்து வாழ்த்தினார்.
அந்த குரல் பதிவில், “இது ஒரு அருமையான கண்டுபிடிப்பு. வரும் காலங்களில் இந்த செயலி ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்போல் மிகவும் பிரபலமடைய வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை நான் வேண்டுகிறேன்” என தெரிவித்தார்.
இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இன்று முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை சந்தித்து ' Hoote’ App.ஐ பற்றி விவரித்து , அவருடைய வாழ்த்துகளை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: ‛அப்பாவுக்கு தமிழ் எழுத தெரியாது’ - 'ஆப்' வெளியீட்டில் ரஜினி மைனஸை வெளியிட்ட மகள்!
Rajinikanth Meets PM Modi | பிரதமர் மோடியை சந்தித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்