தமிழ் திரைப்பட உலகில் எஸ்பிபிக்கு பிறகு அதிக ஹிட் பாடல்கள் கொடுத்த சில பாடகர்களில் மனோவும் ஒருவர். அவர் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளும் பாடல்கள் பாடி அசத்தியுள்ளார். இவர் கிட்டத்தட்ட 2000 பாடல்களுக்கு மேல் இளையாராஜா இசையில் மட்டும் பாடியுள்ளார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டவர்களின் இசையிலும் பல வெற்றி பாடல்களை பாடியுள்ளார். இந்தச் சூழலில் இரவு பொழுதில் நாம் கேட்க கூடிய மனோவின் பாடல்கள் என்னென்ன?

1. மதுர மரிக்கொழுந்து வாசம்:

ராம்ராஜன் நடிப்பில் வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இதை சித்ரா மற்றும் மனோ பாடியிருப்பார்கள். இவர்கள் இருவரின் குரல் மற்றும் இளையராஜாவின் இசை இந்தப் பாடலுக்கு அதிக வலு சேர்த்து இருக்கும். இப்பாடல் வரிகள் குறிப்பாக

"நீதானே என்னுடையராகம் என் நெஞ்செல்லாம்உன்னுடைய தாளம் ஏழேழுஜென்மம் உன்னைப் பாடும்உன்னோட பாட்டுக்காரன்பாட்டும்

என் மனசேனோகிறங்குதடி சிறகடிச்சுப்பறக்குதடி மதுர..."

 

2. நிலா காயம் சரணம்:

பிரசாந்த், ரோஜா நடிப்பில் வெளியான திரைப்படம் செம்பருத்தி. இப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை மனோ மற்றும் ஜானகி பாடியிருப்பார்கள். இதற்கு இளையராஜா இசையமைத்திருப்பார். இவர்களின் கூட்டணியுடன் பாடலின் வரிகளும் சிறப்பாக அமைந்திருக்கும். குறிப்பாக

"பார்வையில் புதுப்புதுகவிதைகள் மலர்ந்திடும்காண்பவை யாவுமே தேன்அன்பே நீயே அழகின் அமுதேஅன்பே நீயே அழகின் அமுதே"

 

3. முக்காலா முக்காபுல்லா:

காதலன் திரைப்படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் மனோ மற்றும் ஸ்வர்ணலதாவின் குரலில் அமைந்த சிறப்பான பாடல் இது. இதற்கு பிரபுதேவாவின் நடனமும் சிறப்பாக இருக்கும். மேலும் இப்பாடல் வரிகளும் அவ்வளவு அழகாக இருக்கும். குறிப்பாக

"லவ்வுக்கு காவலாபதில் நீ சொல்லு காதலாபொல்லாத காவலாசெந்தூர பூவிலா...

ஜுராசிக் பார்க்கில் இன்றுசுகமான ஜோடிகள்ஜாஸ் மியூசிக் பாடி வருது..."

 

4. ஆத்தங்கரை மரமே:

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் மனோ கூட்டணியில் அமைந்த சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று. கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை மனோவுடன் இணைந்து சுஜாதா பாடியிருப்பார். இந்தப் பாடலின் வரிகளும் சிறப்பாக அமைந்திருக்கும். 

"தொட்ட பூஎல்லாம் சுகந்தானாதொடாத பூவும் சுகந்தானாதோப்புல ஜோடி மரங்கள்சுகந்தானா"

 

5. ஒரு மைனா:

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான உழைப்பாளி திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இதற்கு இளையராஜா இசையமைத்திருப்பார். இப்பாடலை மனோவுடன் இணைந்து சித்ரா பாடியிருப்பார். இந்தப் பாடலில் இவர்கள் குரலும் பாடல் வரிகளும் சிறப்பாக அமைந்திருக்கும். 

"சின்ன பூச்சரமேஒட்டிக்கோ கட்டிக்கோஎன்னை சேர்த்து இன்னும்தேவை என்றால் ஒத்துக்கோகத்துக்கோ என்னை சேர்ந்து"

 

இவை தவிர தில்லானா தில்லானா, மோனா காசாலினா போன்ற பல பாடல்களையும் மனோ தனது குரலால் பாடி அசத்தியுள்ளார். 

மேலும் படிக்க: நைட் ப்ளே லிஸ்ட்டுக்கு சில வித்யாசாகர் ஹிட்ஸ்!