தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று மாலையில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது மிதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பல மாவட்டங்களில் லேசான அளவில் பெய்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் எழும்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும்போது தென் மேற்கு பருவமழை தமிழகத்தில் வலுப்பெறுவதற்கு வாய்ப்பு அதிகளவில் உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் அண்ணாசாலை, எழும்பூர் மட்டுமின்றி மெரினா, மண்ணடி, ராயபுரம் உள்ளிட்ட வட சென்னை பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்து வரும் இந்த மழை அடுத்த 2 மணிநேரத்திற்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.