தமிழ் திரையுலகில் சிறப்பான இசையமைப்பாளர்களில் வித்யாசாகரும் ஒருவர். இவர் ஆந்திர மாநிலத்தில் ஒரு இசை குடும்பத்தில் பிறந்தார். தனது தந்தையை போல் இவரும் இசையின் மீது ஆர்வம் ஏற்பட்டு திரைப்பட இசையில் கால் பதித்தார். தமிழ், தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இவர் இசையமைத்துள்ளார். தமிழில் விஜய்,அஜித்,அர்ஜூன் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். 


அப்படி அவர் இசையமைத்த சில பாடல்கள் வரிசை இதோ


1. மலரே மௌனமா:


அர்ஜூன் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் இந்தப் பாடல் மிகவும் ஹிட்டான ஒன்று. எஸ்பிபி-ஜானகி கூட்டணியில் அமைந்த சிறப்பான பாடல்கள் வரிசையில் இதையும் கூறலாம். இப்பாடலுக்கு அவர்கள் இருவரும் இசைக்கு உயிர் கொடுத்த இருப்பார்கள். அத்துடன் பாடலின் வரிகளும் அழகாக இருக்கும். 


"காற்றே
என்னைக் கிள்ளாதிரு
 பூவே என்னைத்
தள்ளாதிரு


 உறவே உறவே
 உயிரின் உயிரே
புது வாழ்க்கை
தந்த வள்ளலே.."


 



2. ஆசை ஆசை:


விக்ரம், ஜோதிகா நடிப்பில் வெளியான தூள் படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இப்பாடலை சங்கர் மகாதேவன் மற்றும் சுஜாதா பாடியிருப்பார்கள். இது ஒரு நல்ல மெலடி பாடலாக அமைந்திருக்கும். குறிப்பாக பாடலின் வரிகள்,


"தலை முதல்
கால் வரை இப்பொழுது
நீ தவறுகள் செய்வது
எப்பொழுது


 ம்ம்.. இடைவெளி
குறைந்தது இப்பொழுது
உன் இதழ்களை துவைப்பது
எப்பொழுது"


 



3.  அப்படி போடு:


விஜய்,த்ரிஷா நடிப்பில் வெளியான கில்லி படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் மிகவும் ஹிட் அடித்த ஒன்று. இப்பாடலை அனுராதா ஶ்ரீராம் மற்றும் கேகே பாடியிருப்பார்கள். இந்தப் பாடல் வரிகளும், விஜய் மற்றும் த்ரிஷாவின் நடனமும் பாடல் ஹிட்டாக முக்கிய காரணமாக அமைந்தது. 


"தை தைன்னு
ஆடிகிட்டு உன்னோடு
நானும் வரேன் நை
நைன்னு பேசிகிட்டு
உன் கூட சேர்ந்து வரேன்"


 



4. தேரடி வீதியில் தேவதை:


மாதவன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றது. இப்பாடலை கார்த்திக் பாடியிருப்பார். இந்தப் பாடல் வரிகள் மற்றும் வித்யாசாகரின் இசை அவ்வளவு சிறப்பாக இருக்கும். 


"காரமா பேசி கோபமா
பார்த்தா ஆந்திரா பொண்ணு
தெரிஞ்சுக்கோ ஓ யே காவேரி
போல வர மறுத்தா கர்நாடகான்னு
தெரிஞ்சுக்கோ ஓ யே..."


 



5. அந்திதோம் திந்தியும்:


ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இந்தப் பாடலை எஸ்பிபி பாடியிருப்பார். இப்பாடலின் வரிகள், எஸ்பிபியின் குரல் மற்றும் வித்யாசாகரின் இசை கேட்கும் போதே இன்பம் அளிக்கும் வகையில் இருக்கும். 


"ஹே ஆறு
மனமே ஆறு இங்கு
அனைத்தும் அறிந்ததாரு
அறிவை திறந்து பாரு அதில்
இல்லாதத சேரு அட எல்லாம்
தெரிஞ்ச எல்லாம் அறிஞ்ச ஆளே
இல்லையம்மா ஆஆ"


 



இவை தவிர மேலும் பல சிறப்பான டாப் பாடல்களை வித்யாசாகர் தனது இசை மூலம் நமக்கு அளித்துள்ளார். 


மேலும் படிக்க: இரவுப் பொழுதை இனிமையாக்கும் ஸ்வர்ணலதாவின் தங்கக்குரல் பாடல்கள்!