தமிழ் திரைப்பட உலகில் மிகவும் சிறப்பான பின்னணி பாடகிகளில் ஒருவராக வலம் வந்தவர் ஸ்வர்ணலதா. இவரின் காந்த குரலுக்கு பலர் அடிமையாக இருக்கின்றனர். இவர் வாழ்ந்த காலம் சிறிதாக இருந்தாலும் அவர் பாடிய பாடல்கள் பல நூற்றாண்டு காலம் வரை இருக்கும் அளவிற்கு அமைந்துள்ளது. இப்படி இரவு நேரங்களில் கேட்க கூடிய அவரது பாடல்கள் என்னென்ன?


1. மாலையில் யாரோ மனதோடு:


இளையராஜா-சுவர்ணலதா கூட்டணியில் அமைந்த சிறப்பான பாடல்களில் இது மிகவும் முக்கியமான பாடல். சத்ரியன் திரைப்படத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடலில் ஸ்வர்ணலதாவின் குரலுடன் வரிகளும் ஒட்டிருக்கும் வகையில் அமைந்திருக்கும். அதில், 


"அடடா நானும் மீனைப் போல
கடலில் வாழக்கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது.."


 



2. என்னுள்ளே என்னுள்ளே:


வள்ளி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இளையராஜாவின் இசையும் ஸ்வர்ணலதாவின் குரலும் அவ்வளவு அழகாக இருக்கும். அத்துடன் இப்பாடலின் வரிகளும் சிறப்பாக அமைந்திருக்கும். குறிப்பாக,


"கண்ணிரண்டில் நூறு
வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ
நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்.."


 



3.முக்காலா முக்காபுல்லா:


காதலன் திரைப்படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் மனோ மற்றும் சுவர்ணலதாவின் குரலில் அமைந்த சிறப்பான பாடல் இது. இதற்கு பிரபுதேவாவின் நடனமும் சிறப்பாக இருக்கும். மேலும் இப்பாடல் வரிகளும் அவ்வளவு அழகாக இருக்கும். குறிப்பாக


"லவ்வுக்கு காவலா
பதில் நீ சொல்லு காதலா
பொல்லாத காவலா
செந்தூர பூவிலா...


ஜுராசிக் பார்க்கில் இன்று
சுகமான ஜோடிகள்
ஜாஸ் மியூசிக் பாடி வருது..."


 



4. காதலேனும் தேர்வு எழுதி:


எஸ்பிபி-சுவர்ணலதா கூட்டணியில் அமைந்த சிறப்பான பாடல்களில் ஒன்று இது. ஏஆர் ரஹ்மான் இசையில் இந்தப் பாடல் காதலர்களை மிகவும் கவர்ந்திருக்கும். இப்பாடலின் வரிகளும் அப்படி சிறப்பாக அமைந்திருக்கும். குறிப்பாக,


"சுகம் வலைக்கையை
வளைக்கையில் உண்டானது
மென்மேலும் கைவளை
வளை என்று ஏங்காதோ...."


 



5. திருமண மலர்கள் தருவாயா:


அஜித், ஜோதிகா நடித்த பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படத்தில் வித்யாசாகர் இசையில் இந்தப் பாடல் அமைந்திருக்கும். இந்தப் பாடலின் வரிகள் மற்றும் ஸ்வர்ணலதாவின் குரல் அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கும். இந்த வரிகளில் முக்கியமாக, 


"போனவுடன் கடிதம் போடு
புதினாவும் கீரையும் சேரு
புத்திமதி சொல்லும் தாயின்
மொழியே இல்லை
ஏன் என்றால் சுவர் தான் உண்டு
தூரம் இல்லை..."


 



இவை தவிர மலை கோவில் வாசலில், ஆட்டமா தேரோட்டமா போன்ற இன்னும் பல ஸ்வர்ணலதாவின் சிறப்பான குரலில் அமைந்திருக்கும். 


மேலும் படிக்க: நீங்களும் சுந்தர் பிச்சை ஆக வேண்டுமா... இந்த 5 பாடல்கள் தான் ‛வார்ம் அப்’ !