திரைப்படங்களில் மிகவும் இளம் வயதில் பாடகராக அறிமுகமானவர் ஹரிஷ் ராகவேந்திரா. 18 வயதில் தெலுங்கு திரையுலகில் பாடகராக அறிமுகமானார். அதன்பின்னர் தமிழில் இளையராஜா இசையில் 'நிற்பதுவே நடப்பதுவே' என்ற பாடல் மூலம் அறிமுகம் ஆனார். அப்போது முதல், தனது சிறப்பான பின்னணி குரலால் பல காதல் பாடல்களை பாடி ஹிட்டுக்கு மேல் ஹிட் அடித்தார். இவருடைய குரலில் அமைந்த சிறப்பான பாடல்கள் என்னென்ன?


1. ஏதோ ஒன்று:


ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான லேசா லேசா படத்தில் பாடல்கள் சிறப்பானதாக அமைந்தது. அதில் ஹரிஷ் ராகவேந்திரா மற்றும் ஶ்ரீலேகா பார்த்தசாரதி குரலில் அமைந்த இப்பாடல் பெரியளவில் ஹிட் அடித்தது. 


"வெண்ணிலவை பூவாய்
வைப்பேனே வானவில்லை
உடையாய் தைப்பேனே உனக்காக
எதும் செய்வேன் நீ எனக்கென
செய்வாயோ..."


 



2. சர்க்கரை நிலவே:


மணிசர்மா இசையில் விஜய் நடிப்பில் வெளியான காதலை பறைசாற்றும் திரைப்படம் 'ஷாஜகான்'. இந்தப் படத்தில் அமைந்த சிறப்பான பாடல் இது. இதிலும் ஹரிஷின் குரல் மற்றும் பின்னணி இசையும் பாடலுக்கு அதிக வலு சேர்த்திருக்கும்.


"கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள் கடைசியில்
எல்லாம் பொய்கள் என் பிஞ்சு
நெஞ்சு தாங்குமா


நவம்பா் மாத
மழையில் நான் நனைவேன்
என்றேன் எனக்கும் கூட நனைதல்
மிக பிடிக்கும் என்றாய் ..."


 



3. முதல் கனவே:


ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பிரஷாந்த் நடிப்பில் வெளியான மஜ்னு திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருந்தது. இப்பாடலும் ஹாரிஸ்-ஹரிஷ் ராகவேந்திரா கூட்டணியில் அமைந்த டாப் பாடல்களில் ஒன்று.  இப்பாடலை ஹரிஷ் ராகவேந்திரா மற்றும் பாம்பே ஜெயஶ்ரீ பாடியிருப்பார்கள்.


"தொலைந்த
என் கண்களை பார்த்ததும்
கொடுத்து விட்டாய் கண்களை
கொடுத்து இதயத்தை
எடுத்து விட்டாய்.."



4. அன்பே  என் அன்பே:


ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படத்தில், இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இது ஹாரிஸ் ஜெயராஜ்-ஹரிஷ் கூட்டணியில் அமைந்த மற்றொரு டாப் பாடல் இது. 


"கண்ணில் சுடும் வெயில்
காலம் உன் நெஞ்சில்
குளிர் பனிக்காலம் அன்பில்
அடை மழைக்காலம் இனி
அருகினில் வசப்படும் சுகம் சுகம்.."



5. அழகிய தீயே:


ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த முதல் படம் மின்னலே. இதில் மாதவன்-ரீமா சென் கூட்டணி சிறப்பாக நடித்திருப்பார்கள். இப்படத்தில் இருந்த பாடல்கள் ஹாரிஸ் ஜெயராஜ் இசையை தமிழ் திரையுலகில் நிலைநாட்டியது. அதில் ஒரு பாடல் தான் இது. 


"நெஞ்சை பூப்போல்
கொய்து விட்டால் நெஞ்சை
பூப்போல் கொய்து விட்டால்..."


 



இவை தவிர தேவதையை கண்டேன்  உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை ஹரிஷ் ராகவேந்திரா பாடியுள்ளார். 


மேலும் படிக்க:  இரவுப் பொழுதை அழகாக்கும் சின்னகுயில் சித்ரா ப்ளேலிஸ்ட் !