தமிழ் திரை இசையில் நீண்ட நாட்களாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் முக்கியமான பாடகிகளுள் சித்ரா மிக முக்கியமானவர். சின்ன குயில் பாட்டு என்ற பாடலை பாடிய ஹிட் அடித்த பிறகு இவருக்கு சின்ன குயில் சித்ரா என்ற பெயர் வந்தது. குயில் போன்ற அழகான குரலை வைத்து 1985-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடி அசத்தி வருகிறார். மெல்லிசை பாடல்களை அதிகமாக பாடி வருகிறார்.
இரவு நேரத்தை அழகாக்கும் சின்ன குயில் சித்ராவின் பாடல்கள் என்னென்ன?
1. பூவே பூச்சூடவா:
பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இளையராஜா இசையில் அமைந்த சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று. இதில் சின்ன குயில் பாட்டு, பூவே பூச்சூடவா என்ற இரண்டு பாடல்களையும் சித்ரா பாடியிருப்பார். இந்த இரண்டு பாடல்களும் பெரிய ஹிட் அடித்தது.
"ஜீவ தீபங்கள்
ஓயும் நேரம் நீயும்
நெய்யாக வந்தாய்
இந்த கண்ணீரில்
சோகமில்லை இன்று
ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும்
நீயும் என் தாய்...."
2. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்:
இளையராஜா இசையில் அமைந்த புன்னகை மன்னன் திரைப்படத்தில் இந்தப் பாடல் அமைந்திருக்கும். இளையராஜாவின் இசை மற்றும் சித்ராவின் குரலில் இந்தப் பாடல் சிறப்பான ஒன்றாக அமைந்திருக்கும்.
"சில காலமாய் நானும்
சிறை வாழ்கிறேன் உன்னை
பார்த்ததால் தானே உயிர்
வாழ்கிறேன் தூக்கம் விழிக்கிறேன்..."
3. நீ ஒரு காதல் சங்கீதம்:
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் திரைப்படத்தில் அமைந்த சிறப்பான மெல்லிசை பாடல் இது. இந்தப் பாடலை சித்ரா மற்றும் மனோ பாடியிருப்பார்கள். இளையராஜாவின் இசை மற்றும் பாடல் வரிகள் நமக்கு அதிகமான இன்பத்தை தரும்.
"தேனை ஊற்றும்
நிலவினில் கூட தீயினை நீ
ஏன் மூட்டுகிறாய் கடற்கரைக் காற்றே
கடற்கரைக் காற்றே வழியை
விடு தேவதை வந்தாள் என்னோடு..."
4. தென்மேற்கு பருவ காற்று:
கருத்தம்மா படத்தில் இடம்பெற்ற தென்மேற்கு பருவ காற்று பாடல் சிறப்பான ஒன்றாக இருக்கும். இதை உன்னிகிருஷ்ணன் மற்றும் சித்ரா ஆகியோர் பாடியிருப்பார்கள். இதற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருப்பார்.
"மழைத்துளி
என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு
தொட்டாடுதே
மழைத்துளி
தொட்ட இடம் நீ
தீண்டவோ நினைக்கையில்
உள்ளூறக் கள்ளூறுதே ..."
5. கண்ணாலனே:
ஏஆர் ரஹ்மான் இசையில் அமைந்த பம்பாய் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இந்தப் பாடலில் சித்ராவின் குரலை கேட்கும்போது உள்ளே அவ்வளவு இன்பம் வரும். அத்துடன் ரஹ்மானின் பின்னணி இசை மற்றும் பாடல் வரிகள் இன்னும் பாடலை அழகாக காட்டும்.
"ஒரு மின்சாரம் பாா்வையின்
வேகம் வேகம் உன்னோடு நான்
கண்டுகொண்டேன் ஒரு பெண்ணோடு
தோன்றிடும் தாபம் தாபம் என்னோடு
நான் கண்டுகொண்டேன்..."
இவை தவிர தேவா,வித்யாசாகர்,ஜிவி பிரகாஷ், சங்கர் கணேஷ் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுடம் பணியாற்றி நிறையே ஹிட் பாடல்களை சின்ன குயில் சித்ரா வழங்கியுள்ளார். அவற்றை எல்லாம் பட்டியல் போட்டோம் என்றால் ஒரு நாள் போதாது.
மேலும் படிக்க: Janaki | கொஞ்சும் குரலழகி.. இரவுப் பொழுதை அழகாக்கும் ஜானகியின் ப்ளேலிஸ்ட் !