சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரபல யூட்யூப் பிரபலம் அனிதா சம்பத் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில், படிக்கும் இடத்தில், வேலை செய்யும் இடத்தில், தங்கள் வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட பெண்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் சமீப காலமாக பெண்கள் மீது தொடுக்கப்படும் உடல்  மற்றும் உளவியல் ரீதியான தாக்குதல் பெரும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. 


இந்நிலையில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கென தனி ரசிகர்களை பெற்ற அனிதா சம்பத் மகளிர் தின வாழ்த்து தொடர்பான பதிவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


அதில், “சொல்லவே மனசு வரல..இருந்தாலும் சொல்லி வைக்கிறேன். "மகளிர் தின வாழ்த்துகள்".

ஏன்னா இதையும் சொல்லிக்காம கொண்டாடிக்காம போய்ட்டோம்னா இருக்குற கொஞ்ச நஞ்ச குவியமும் இந்த பாழாபோன genderக்கு கிடைக்காம போய்டுமோனு ஒரு பயம்தான்..

1வயசுனாலும் விடுறதில்ல
9 வயசுனாலும் விடுறதில்ல
பொண்ணா இருந்தாலும்
பாட்டியா இருந்தாலும்
ஏன், நம்ம ஊர நம்பி வர foreignerனாலும் விடுறதில்ல..

அன்னக்கி கள்ளிபால குடுத்து வீசுனீங்க.
இன்னக்கி கற்பழிச்சி
ஆத்துலயும் குளத்துலயும் சாக்கடையிலயும் வீசுரீங்க.

குழந்தை பிறப்புக்காக படைக்கப்பட்ட அந்த ஒரு துவாரத்த காப்பாத்திகிறதுலயே பொண்ணுங்க வாழ்க்கை போய்டுது.
பாக்குற படிக்குற ஒரு ஒரு செய்தியும் வெளிய வர நினைக்கிற மத்த பொண்ணுங்களையும் வீட்டுக்குள்ள அடைச்சிடுது..

இன்னொரு பக்கம்..
நிறைய சிரிக்காத
நிறைய அழுவாத
நிறைய பேசாதானு
அவளுக்கு புடிச்சத செய்ய உடாம அழுத்தி அழுத்தி வேடிக்க பாக்க வேண்டியது.

இத எதிர்த்து பேசிட்டோம்னா
தேடி வரும் தே* பட்டம்.

அப்படியே இதையெல்லாம் மீறி வேலைக்கு போய்ட்டோம்னா..என் மனைவி வீட்டையும் பாத்துக்குறா வேலையும் பாத்துக்குறானு glorify பண்ணி பண்ணி மொத்ததையும் நம்ம தலையிலையே கட்டுறது.

பொண்ணுங்க அப்படி என்ன சாபம் தான் வாங்கிட்டு வந்தமோ தெரில..நமக்காக நம்ம voice out பண்ணிக்கிட்டா கூட அத வெறுக்க அவ்ளோ பெரிய கூட்டம்.
ஆண்கள் வலியெல்லாம் நல்லாவே தெரியும், நாங்க முடக்குற சமூகத்த பத்தி மட்டும்தான் பேசுறோம்னு எப்படி புரியவைக்கிறது.

அடுத்த பலிகடா உங்க பெண் குழந்தையாகவும் இருக்கலாம் ங்குறதுதான் எங்க கவல.

பெண்கள தெய்வமாலாம் வணங்க வேணாம்..
மதிக்க கூட வேணாம்.
அவங்கள அவங்களா இருக்க விட்டாலே போதும்.

ஜெய்ச்ச மகளிர மட்டுமே கொண்டாடாம
ஜெய்க்க முடியாம திண்டாடுற, போராடுற மகளிரையும் சேர்த்து கொண்டாடுவோம்.

சொல்லும் போதே சொல்லவிடாம தொண்டை கணக்குது.இருந்தாலும்…
Happy women’s day💔” என தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க: Mumtaj: சினிமாவை விடுறதுக்கு என்ன காரணம்?.. வெளிப்படையாக பேசிய நடிகை மும்தாஜ்!