சினிமாவில் நடிப்பதை எதன் காரணமாக நிறுத்தினேன் என பிரபல நடிகை மும்தாஜ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
1999 ஆம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கிய மோனிஷா என் மோனாலிசா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மும்தாஜ். அந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து விஜய்யுடன் குஷி படத்தில் கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடலுக்கு ஆடி மிகப்பெரிய அளவில் பிரபலமானார். தொடர்ந்து
மலபார் போலீஸ், உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, சொன்னால் தான் காதலா, வேதம், சாக்லேட், மிட்டா மிராசு, ஏழுமலை, லண்டன், வீராசாமி, ராஜாதி ராஜா உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பல நடிகர்களின் படங்களில் சிறப்பு தோற்றத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். மும்தாஜை ஒரு கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமா வெளிப்படுத்தியிருந்தது.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் அவர் கலந்து கொண்ட நிலையில் மும்தாஜ் மீதான பார்வை மாறியது. கிட்டதட்ட மும்தாஜ் சினிமாவில் நடிப்பதை நிறுத்தியே விட்டார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் தான் நடிப்பை நிறுத்த காரணம் என்ன என்பதை அவர் விளக்கியுள்ளார்.
அதில், “நான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் தான் பிறந்தேன். எனக்கு குர்ஆன் பற்றி நன்றாக தெரியும். அல்லாஹ் எனக்கு சில விஷயங்கள் செய்ய வேண்டும் செய்யக்கூடாது என கட்டளையிட்டு இருக்கிறார். ஆரம்பத்தில் குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்களின் அர்த்தம் தெரியாமலேயே இருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் அது புரிய ஆரம்பித்தபோது எனக்குள் மெல்ல மெல்ல மாற்றம் நிகழத் தொடங்கியது. அதன் காரணமாக சினிமாவில் இதை செய்ய மாட்டேன் அந்த கதை வேண்டாம் என சொல்ல தொடங்கினேன். நான் சினிமாவை கைவிடுவதற்கு அல்லாஹ் தான் காரணம். எல்லாமே என்னிடம் இருந்தும் நிம்மதி இல்லை என பலர் சொல்லி கேட்டிருப்போம்.
அதனால் நான் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் போது உங்களுக்கு என்னிடம் இருந்து என்ன வேண்டும் என எனக்குத் தெரியாது என சொல்லிக் கொள்வேன். அவர் என்னிடம் மெல்ல மெல்ல சில மாற்றங்களை ஏற்படுத்தினார். ஒரு நாள் வீட்டில் அமர்ந்திருக்கும் போது நானே என்னை அறியாமல் என் உடையை சரி செய்தேன். வெளியே செல்லும்போது கண்ணியமான உடை அணிந்தேன். சினிமாவில் ஸ்விம்மிங் சூட் அணிந்து நடித்த ஒருத்தி இப்படிப்பட்ட ஆடை அணிவது நிச்சயம் வித்தியாசமானது தான்” என மும்தாஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Ambani Shankar: மோசடி கும்பலிடம் ஏமாற பார்த்தேன்.. அம்பானி ஷங்கர் சொன்ன பகீர் கதை!