Actor Vijay Attacked: விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது, விஜய் மீது காலணி வீசப்பட்டது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

 

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர் என பலரும் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்த ரஜினி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் கடந்த 28ம் தேதி இரவு 10 மணிக்கு மறைந்த விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் சென்றிருந்தார். விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்ட கண்ணாடி பேழை மீது கை வைத்து அஞ்சலி செலுத்திய விஜய் சில நிமிடங்கள் விஜயகாந்த் உடலை பார்த்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கும், அவரது மகன்களுக்கும் ஆறுதல் கூறிய விஜய், தனது காரில் புறப்பட தயாரானர்.

 

அப்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் விஜயகாந்தை பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்ற காவலர்கள் முயன்றனர். அப்போது எங்கிருந்தோ ஒருவர் வீசிய காலணி ஒன்று விஜய்யின் முதுகு பகுதியில் விழுந்தது. விஜய் மீது காலணி வீசிய வீடியோ இணையத்திலும் வேகமாக பரவியது. இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.

 





இந்த நிலையில் விஜய் மீது காலணி வீசப்பட்டது தொடர்பாக சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தென் சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், விஜய் மீது புகார் காலணி வீசிய நபரை கண்டுப்பிடித்து அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் விஜய் மீது செருப்பு வீசிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.