தமிழ் சினிமாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் இருக்கிறார். இவர் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14-ம் தேதி வெளியாகிறது. இதில் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி உடன் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் ’வண்ணாரப்பேட்டையில... என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் எஸ்.கே.21 படத்தில் நடத்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
டோலிவுட் நடிகைகள் இடையே போட்டி
சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன், அயலான் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தொடர்ந்து, சிவகார்த்திகேயன் 22 -வது படத்தில் நடிப்பதற்கு இரண்டு முன்னணி நடிகைகள் இடையே போட்டி நிலவுவதாக சொல்லப்படுகின்றன. சீதா ராமம் நாயகி மிருணாள் தாகூர், பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடிகைகள் இருவரும் சிவகாத்திகேயனுடன் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இரண்டு பேரில் யாராது ஒருவரை எஸ்.கே.-22 படத்தில் நாயகியாக தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சின்னத்திரையில் மிமிக்ரி, தனது டைமிங் காமெடியால் ரசிகர்களை கவர்ந்த சிவகார்த்திகேயன், 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெரினா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதற்கு முன்னால் சில விளம்பரங்களிலும், படங்களிலும் தலைக்காட்டிய சிவா, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். தொடர்ந்து எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, டாக்டர், டான், பிரின்ஸ் ஆகிய பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார்.
தற்போது மாவீரன்,அயலான் ஆகிய படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், பாடகர், தயாரிப்பாளர் என பல துறைகளிலும் முத்திரை பதித்துள்ளார். இதனிடையே சிவகார்த்திகேயன் 2010 ஆம் ஆண்டு தனது உறவினரான ஆர்த்தியை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு ஆராதனா, குகன் தாஸ் என இரு குழந்தைகள் உள்ளனர்.
மாவீரன் படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் இரண்டு பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இதில் இரண்டாவது பாடலான ‘வண்ணாரப்பேட்டையில’ பாடலை சிவகார்த்திகேயன் - அதிதி சங்கர் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் சமூக வலைதளங்களில் ஹிட் அடித்துள்ளது.
மேலும் இப்படத்தின் டைட்டில் டீசரும் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 'எதிர்த்து நின்றான்' எனும் கேப்ஷனுடன் சிவகார்த்திகேயன் படங்களுடன் கூடிய காமிக்ஸ் வரைபடங்களும் இந்த டீசரில் காணப்பட்டன.
இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி பெற்றுள்ளது. இந்நிலையில் மாவீரன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் வாசிக்க..
'மலடா...அண்ணாமலை’ ... கமர்ஷியல் கிங் ஆன ரஜினி... 31 ஆண்டுகளை நிறைவு செய்த அண்ணாமலை..!