திருவள்ளூர் மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களையும், தொழில்முனை வோரையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டத்தில் 398 இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளன. கிராமப் புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.3 ஆயிரமும், நகர்ப் புறத்துக்கான மின்கட்டணம் ரூ.6 ஆயிரமும் செலுத்த ரூ.6 ஆயிரமும் செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க https://tnesevai.tn.gov.in/- அல்லது https://tnega.tn.gov.in/- என்ற இணைய முகவரியை பயன் படுத்த வேண்டும். வரும் 30-ம் தேதி இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும், அருகில் உள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை முகவரி என்ற செயலியைப் பயன்படுத்திக் காணலாம். அல்லது https://tnega.tn.gov.in- என்ற இணையதளத்தில் காணலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பிக்க கடைசி நாள் - 30.06.2023