சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே 21 படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சிவகார்த்திகேயனின் அடுத்த படம்


சிவகார்த்திகேயன்  நடித்து சமீபத்தில் வெளியான அயலான் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. பொங்கலை முன்னிட்டு வெளியான அயலான் உலகம் முழுவதும் 50 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி பரவலான ரசிகர்களை சென்றடைந்துள்ளது. மேலும் அயலான் படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் எஸ்.கே 21 படத்தில்  நடித்து வருகிறார். ராணுவ வீரராக இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்க கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.


இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் கல்லூரி மாணவனாகவும், ராணுவ வீரனாகவும் இரண்டு தோற்றத்தில் சிவகார்த்திகேயனை நாம் எதிர்பார்க்கலாம். கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 80 சதவிதம் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இப்படத்தின் டைட்டில் அல்லது மற்ற அப்டேட்களை படக்குழு வெளியிடாமல் வைத்துள்ளது.


இந்நிலையில் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மேலும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் இந்த தகவலை உறுதிபடுத்து வகையில் அமைந்துள்ளன.


எஸ்.கே 21 ஃபர்ஸ்ட் லுக்






எஸ்.கே 21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் வேலைகள் முழுவீச்சில் நடந்து வரும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இப்படத்தில்  உலகநாயகன் கமல்ஹாசன் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக முன்னதாக தகவல் வெளியாகியது, இதனால் படக்குழு மொத்தமும் கமலின் கால்ஷீட்டுக்காக காத்திருப்பதாகவும் இந்த பகுதிகள் முடிந்த கையோடு படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.


இன்று மாலை அப்டேட்


இன்று மாலை 5 மணிக்கு இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவில் சிவகார்த்திகேயன் படத்துக்காக தயாரான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ஆக இன்றைய அப்டேட் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 








மேலும் படிக்க : Actor Vishal: மோடியா, ராகுல் காந்தியா.. 2024 தேர்தலில் வெற்றி யாருக்கு? விஷால் கணிப்பு இதுதான்!


Shruti hassan : வுமன் இன் பிளாக் : அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்த ஸ்ருதி ஹாசன்!