எஸ்.ஜே சூர்யாவுடன் பணியாற்றுவது தனது நீண்ட நாள் ஆசையாக இருந்ததாகவும், எல்.ஐ.சி படத்தில் அது நிறைவேறியுள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.


எல்.ஐ.சி


அஜித்துடனான திரைப்படம் கைவிடப்பட்ட பிறகு சென்ற ஆண்டு முழுக்க விக்னேஷ் சிவன் அமைதி காத்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாத மத்தியில் அவரது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. கோமாளி,  லவ் டுடே திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் சென்சேஷனாக மாறிய இயக்குநர், நடிகர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, இப்படத்துக்கு எல்.ஐ.சி (லவ் இன்ஸூரன்ஸ் கார்ப்பரேஷன்) எனப் பெயரிடப்பட்டது. இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.


மேலும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, சீமான் கௌரவக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், யோகி பாபு உள்ளிட்டோரும் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரவுடி பிச்சர்ஸ் மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்க, அனிருத் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.


முன்னதாக படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனைப் புகழ்ந்து நடிகர் எஸ்.ஜே  சூர்யா பதிவிட்டிருந்தார்.











இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் எஸ்.ஜே சூர்யாவை புகழ்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் ”இந்த நடிப்பு அரக்கணுடன் வேலை செய்வது எனது நீண்ட நாள் ஆசையாக இருந்திருக்கிறது. தனது வேலையின் மேல் அவருக்கு இருக்கும் அனுபவம், எனர்ஜி எல்லாம் நம்மை ஆச்சரியப்படுத்தக்கூடியது . சினிமாவில் எத்தனையோ நடிகர்களை நான் பார்த்திருக்கிறேன் ஆனால் இப்படி ஒரு கிரேஸியான, அதே நேரத்தில் நடிப்பதை சீரியஸாக அணுகும் ஒருவரை நான் பார்த்ததில்லை. உங்களுக்கு மிகப்பெரிய இடம் ஒன்று காத்திருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்