தனியார் தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. சீரியல் புரொமோவில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கும் ஹீரோ மற்றும் பொறுப்புடன் குடும்பத்தை கவனிக்கும் நாயகி என்று தான் காட்டப்பட்டது. ஆனால் இப்போது கதைக்களத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய கேரக்டர்களால் கதைக்களம் சற்று சூடு பிடிக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆரம்பத்தில் சீரியலில் ஹீரோயின் மீனாவை உதாசீணப்படுத்திய முத்து, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறார். இப்போது முத்து-மீனா இருவருக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டு கியூட்டான ஜோடியாக வலம் வருகிறார்கள். மேலும் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் சுந்தரராஜனும் இந்த சீரியலில் சிறப்பாக நடித்து வருகிறார். இதுவும் இந்த சீரியலுக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
சிறகடிக்க ஆசை தொடர், நாளுக்கு நாள் TRPயில் சற்று முன்னேறி வருகிறது. பரபரப்பான கதைக்களமும் இதற்கு முக்கிய காரணம். தற்போது இந்த தொடரின் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி வந்துள்ளது. அதாவது வெள்ளிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் இனி சனிக்கிழமைகளிலும் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.
தற்போது பல்வேறு தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒலிபரப்பு செய்கின்றன. அதற்கு காரணம் சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே இருப்பது தான். ஆம் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் போதெல்லாம், சீரியல் பார்ப்பதா, கிரிக்கெட் பார்ப்பதா என வீட்டில் உள்ள இல்லத்தரசிகளுக்கும், இளசுகளுக்கும் இடையே பெரும் சண்டையே எழும். அந்த அளவிற்கு சீரியல்கள் கணிசமான ரசிகர்களை கொண்டுள்ளது. சீரியலை ஒளிபரப்பினால் டி.ஆர்.பி.யை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதால் புதிதாக வரும் எண்டர்டெயுன்மெண்ட் சேனல்கள் கூட சீரியல்களை ஒளிபரப்புவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும் படிக்க ,
CM Stalin Speech: 'வாரிசுகளால் தமிழகம் வளர்கிறது'- கல்லூரி விழாவில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு