சென்னை தரமணியில் செயல்பட்டு வரும்  Board Of Apprenticeship Training (SR) என்ற அரசு நிறுனத்தில் உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க இம்மாதம் 27-ம் தேதி கடைசி தேதியாகும். தொழில்பழகுநர் பயிற்சி நிறுவனத்தில் குரூப் சி, லெவல் 1- 5 ஊதிய வகையில் பணி வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 


பணி விவரம்:



  • ஸ்டெனோகிரபர்

  • ஜூனியர் அசிஸ்டண்ட் / லோயர் டிவிசன் கிளர்க்

  • மல்டி டாஸ்க்கிங் ஸ்டாஃப்


கல்வித் தகுதி:



  • ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 அல்லது 12-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 

  • டைப்பிங் மற்றும் ஸ்டெனோகிராபர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சான்றிதழ் அவசியம். (டைப்பிங் 40 w.p.m. ) (shorthand speed of 100 words per minute)

  • ஜூனியர் அசிஸ்டண்ட் பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும். (30 words per
    minute)

  • பன்முக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


ஊதிய விவரம்:


ஸ்டெனோகிரபர் - ரூ.25,500 (லெவல் 4, 7th CPC)


ஜூனியர் அசிஸ்டண்ட் / லோயர் டிவிசன் கிளர்க் ரூ.19,900 (லெவல் 2, 7th CPC)


மல்டி டாஸ்க்கிங் ஸ்டாஃப் - ரூ.18,000 (லெவல் 1, 7th CPC)


தேர்வு செய்யப்படும் முறை:


இதற்கு எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 


விண்ணப்பக் கட்டணம்:


இதற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் / ஓ,பி,சி. ரூ.1000 செலுத்த வேண்டும். பட்டியலின /பழங்குடியின பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். 


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு http://boat-srp.com/ - என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அதோடு விண்ணப்ப கட்டண ரசீது ஆகியவற்றின் நகலை தரமணியில் உள்ள அலுவலகத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 27.07.2023


இது தொடர்பான் கூடுதல் விவரங்களை http://boat-srp.com/wp-content/uploads/2023/06/RIS_JA_sten_Mts_16.06.2023.pdf - என்ற இணையதளத்தில் காணவும். 


***********


’Institute of Banking Personnel Selection’ என்றழைக்கப்படும் வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தின் உதவி அலுவலர் பணியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 4045  பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (21.07.2023) கடைசி நாளாகும். 


பணி விவரம்:


உதவி அலுவலர்


மொத்த பணியிடங்கள் - 4045


’COMMON RECRUITMENT PROCESS’-ல் பங்கேற்கும் வங்கிகள்:


பேங்க ஆஃப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யு.சி.ஓ. வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா,பஞ்சாப் நேசனல் வங்கி,யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, இந்தியன் வங்கி, பஞ்சாப் அன்ட் சிந்த வங்கி ஆகிய வங்கிகளுக்கு இந்தத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 


கல்வித் தகுதி:


21.07.2023-ன் படி, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.


உள்ளூர் மொழியில் எழுத,படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தியடைந்தவராகவும் 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 


அரசு விதிகளின்படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யப்படும் முறை:


இதற்கு தகுதியானவர்கள் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.


தேர்வு பாடத்திட்டம்




முதன்மை தேர்வு




 


விண்ணப்ப கட்டணம்




எப்படி விண்ணப்பிப்பது?


இதற்கு  https://cgrs.ibps.in/ - https://www.ibps.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் அப்டேட்களை காணவும்.


முக்கிய நாட்கள்:





விண்ணப்பிக்க கடைசி தேதி - 21.07.2023


இந்தப் பணிக்கு ஒவ்வொரு பதவிக்கும் தனியே தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வித் தகுதி எழுத்துத் தேர்விற்கான பாடத்திட்டங்கள் உள்ளிட்டவைகள் தொடர்பான முழு விவரத்தை https://www.ibps.in/wp-content/uploads/Final_Notification_CRP_CLERKS_XIII_30.6.23.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.