Dhanush: ஐஸ்வர்யா நல்ல அம்மாவா?.. தனுஷ் மட்டும் தான் ஏமாற்றுக்காரரா? - பாடகி சுசித்ரா கேள்வி!

கடந்த 2022 ஆம் ஆண்டு தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் பரஸ்பர விவாகரத்து பெறுவதாக தெரிவித்தனர். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Continues below advertisement

தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் ஒருவரையொருவர் ஏமாற்றியதே விவாகரத்து காரணம் என பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகளான ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் கடந்த 2005 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். தனுஷ் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நிலையில் ஐஸ்வர்யாவும் இயக்குநராக சில படங்களை இயக்கியுள்ளார். இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் பரஸ்பர விவாகரத்து பெறுவதாக தெரிவித்தனர். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இருவரையும் இணைக்க ரஜினி மற்றும் தனுஷ் குடும்பத்தினர் பெரும் முயற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வெளியானது. பிரிவுக்கு பின்னர் இருவரும் தங்கள் சினிமா கேரியரில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஐஸ்வர்யா தனது இரு மகன்களுடன் ரஜினியுடன் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. மகன்கள் தொடர்பான நிகழ்ச்சிகளில் மட்டும் இருவரும் சந்தித்து வருகின்றனர். இந்த விவாகரத்துக்கு பல விதமான காரணங்கள் சொல்லப்பட்டது. 

இப்படியான நிலையில் பாடகி சுசித்ரா, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பற்றி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதில், “தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட போது தனுஷை தாறுமாறாக பயில்வான் ரங்கநாதன் விமர்சித்தார். ஐஸ்வர்யாவை புகழ்ந்து பேசினார். அப்படி ஐஸ்வர்யா என்ன சாதித்தார் என தெரியவில்லை. மக்களின் அனுதாபம் எல்லாம் தனுஷ் பக்கம் தான் இருந்தது. காரணம் ஐஸ்வர்யா ஒரு கெட்ட அம்மா, தனுஷ் சிறந்த அப்பா. ஒரு அம்மாவாக தன்னை மட்டுமே பிரோமோஷன் செய்தார் ஐஸ்வர்யா. இதுதொடர்பாக தனுஷை நேர்காணல் செய்தால் தெரியும். 

அம்மாவாக இருந்து கொண்டு ரீல்ஸ் போடும் விஷயத்தில்  யாருடனும் எனக்கு உடன்பாடு இல்லை. அம்மா என்றால் அம்மாவாக இரு. குழந்தையை பக்கத்தில் வைத்துக்கொண்டு ரீல்ஸ் போடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஐஸ்வர்யா தனுஷ் தன்னை ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டுகிறார். அதேதான் ஐஸ்வர்யாவும் பண்ணியிருக்கிறார். அந்த தம்பதியினர் ஒருவரையொருவர் ஏமாற்றியிருக்கிறார்கள். இருவரும் டேட்டிங் செய்யும் நபர்களோடு வெளிப்படையாக ஹோட்டலுக்கு செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள். டேட்டிங் செல்வது இயல்பு என்றாலும் திருமணமான பிறகு டேட்டிங் செல்வது சரியா? விவாகரத்து விஷயத்தில் தனுஷூக்கு தான் என்னுடைய சப்போர்ட்" என பாடகி சுசித்ரா கூறியுள்ளார்.  


Also Read: ரஜினி காசு கொடுத்தால் தனுஷை கூட வசை பாடுவார்! - பயில்வான் ரங்கநாதனை விளாசிய சுசித்ரா!

Continues below advertisement
Sponsored Links by Taboola