பயில்வான் ரங்கநாதன் காசு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவார் என பாடகி சுசித்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். 


பத்திரிக்கையாளர், நடிகர் என பலமுகம் கொண்டவராக தன்னை காட்டிக்கொள்ளும் பயில்வான் ரங்கநாதன் சினிமா பிரபலங்களை பற்றி சமீபகாலமாக தரக்குறைவான கருத்துகளை பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். எல்லாவற்றிற்கும் தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறும் அவரிடம் சண்டை போடாதவர்களே இல்லை. ஆனால் சினிமாவில் பல நிகழ்வுகள் நடப்பதாக பல நேர்காணல்களிலும் பேசி வருகிறார். 


இதனிடையே தன்னைப் பற்றி தரக்குறைவான கருத்துகளை பேசியதால் கடந்தாண்டு பாடகி சுசித்ரா போலீஸில் பயில்வான் ரங்கநாதன் மீது புகாரளித்தார். அவரை தொலைபேசியில் அழைத்து சுசித்ரா கடுமையாக கண்டித்த ஆடியோவும் வைரலானது. இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய சுசித்ரா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். 


அதில், “சுச்சி லீக்ஸ் சம்பவத்துக்கு கார்த்திக் குமார், தனுஷ், ஆண்ட்ரியா உள்ளிட்ட நண்பர்கள் கூட்டம் தான் காரணம். அவர்கள் செய்த பிராங்க் விளையாட்டால் தான் அப்படிப்பட்ட புகைப்படங்கள் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியோடு வெளியானது. அதனால் தான் யாரும் சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் புகாரளிக்கவில்லை. இதன் காரணமாக எனக்கும் கார்த்திக் குமாருக்கும் விவாகரத்து ஆனது. நான் எல்லாவற்றிலும் விலகி இருந்தேன். ஆனால் பயில்வான் ரங்கநாதன் 6 மாதங்களுக்கு ஒருமுறை என்னை பற்றியோ, சுச்சி லீக்ஸ் பற்றியோ பேசிக்கொண்டு இருக்கிறார். 


தனுஷ், கார்த்திக் குமார் இருவரும் காசு கொடுத்து பயில்வானை பேச சொல்கிறார்கள் என நினைக்கிறேன். காசு கொடுத்து தனுஷூக்கு எதிராக பேச ரஜினி சொன்னால் கூட பயில்வான் ரங்கநாதன் பேசுவார். நான் எந்த ஹோட்டலிலும் போய் மனநல பிரச்சினைக்கு சிகிச்சை எடுத்தது இல்லை. என்னைப் பற்றி சொன்னது அனைத்தும் கட்டுக்கதை. எனக்கும் பயில்வான் ரங்கநாதனுக்கும் தனிப்பட்ட முன்விரோதம் என்பது இல்லை. அவருக்கு கார்த்திக் குமார் காசு கொடுத்து பேச வைக்கிறார் என நினைக்கிறேன். நான் பயில்வான் ரங்கநாதனை பார்த்தது கூட இல்லை.


நான் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால் எப்படி 20 வருடம் ரேடியோவில் நேரலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருப்பேன். எனக்கு அந்த கேள்வியை திரும்ப திரும்ப கேட்பதால் கடுப்பாக இருந்தது. நான் பப்ளிசிட்டி தேடுபவராக இருந்தால் சுச்சி லீக்ஸ் நேரத்தில் தேடியிருக்கலாமே? தனுஷ் கூட்டமே கார்த்திக் குமார் பக்கம் இருந்தது. ஆனால் என் பக்கம் யாருமே இல்லை. 


பயில்வான் ரங்கநாதன் வாயை தொறந்தாலே போய் தான் பேசுகிறார். நான் அவர் மீது புகார் கொடுக்க சென்றபோது 21வது ஆளாக நான் வந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்” என பாடகி சுசித்ரா கூறியுள்ளார்.