Rajalakshmi: ஒரே ஒரு வீடியோவுக்கு மோசமான கமெண்ட்ஸா? கடுப்பான ராஜலட்சுமி

"அறிவு இல்லாதங்க தான் இப்படியெல்லாம் விமர்சனம் செய்ய முடியும். நான் பேசுவது மட்டுமில்லாமல், நான் போட்டியிருந்த உடையை பற்றி கூட விமர்சித்திருந்தனர்" என்று வேதனை தெரிவித்துள்ளார் பாடகி ராஜலட்சுமி.

Continues below advertisement
Rajalakshmi: மக்களிசை பாடகராக பிரபலமான ராஜலட்சுமி, ஆங்கிலத்தில் பேசும் வீடிவை பார்த்த நெட்டிசன்ஸ் கிண்டலடித்து வரும் நிலையில், அதற்கு ராஜலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார். 

ராஜலட்சுமி - செந்தில் கணேஷ் தம்பதி:  

ராஜலட்சுமி - செந்தில் கணேஷ் தம்பதி தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள். இவர்களுக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், லைசென்ஸ் என்ற படத்தில் லீட் கேரக்டரில் ராஜலட்சுமி நடித்துள்ளார். படத்தில் அரசுப்பள்ளி ஆசிரியராக ராஜலட்சுமி நடித்த கேரக்டர் பேசப்பட்டது. 
 
தொடர்ந்து வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சியில் ராஜலட்சுமி - செந்தில் கணேஷ் தம்பதியினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டுமில்லாமல், வெளிநாடுகளுக்கு சென்ற இருவரும் அங்கிருந்து வீடியோக்கள் எடுத்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், வெளிநாட்டில் இருந்தபடி பாடல் குறித்து ஆங்கிலத்தில் ராஜலட்சுமி உரையாடியுள்ளார். அதை பார்த்த சிலர், நெக்ட்டிங் கமெண்ட் செய்து வருகின்றனர். 
 

நெகட்டிவ் கமெண்ட்ஸ்:

 
இந்த நிலையில் தன் மீதான நெகட்டிங் கமெண்ட் குறித்து ராஜலட்சுமி பேசியுள்ளார். அதில், “ஆங்கிலம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு பர்சனலாக இருந்தது. அதன் மீதான, பெரிய கனவு இருந்தது. எப்படியாவது ஆங்கில மொழியை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால், கொஞ்சம் கொஞ்சமாக கத்துக்கிட்டு இருக்கேன். ஆங்கிலத்தை நமக்குள் பேசி கொண்டு இருக்காமல், வெளியில் பேசுவது தான் சரியாக இருக்கும் என்பதாலும், எந்த இடத்தில் தவறு செய்கிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாலும் ஆங்கிலத்தில் பேசினேன். 
 
அதுக்கு அவ்வளவு நெகட்டிங் கமெண்ட்ஸ் வந்துள்ளது. அறிவு இல்லாதங்க தான் இப்படியெல்லாம் விமர்சனம் செய்ய முடியும். நான் பேசுவது மட்டுமில்லாமல், நான் போட்டியிருந்த உடையை பற்றி கூட விமர்சித்திருந்தனர். உடை என்பது எனது சுதந்திரம், எனக்கு பிடித்த உடையை நான் எங்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள்வேன். எனக்குன்னு சுய ஒழுக்கம் இருக்கும். பாடிஷேமிங் செய்வதை பிற்போக்குத்தனம் என்றே நான் பார்க்கிறேன். நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்திருந்தாலும் பாசிட்டிவாக நான் இருக்கிறேன். சிலர்  பாசிட்டிவான கமெண்ட்ஸ் செய்துள்ளனர்” என பேசியுள்ளார். 
 
 
 
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola