சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் படம் மாநாடு(Maanaadu). சிம்பு கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்திருக்கிறார்.


எஸ்.ஜே. சூர்யா, ப்ரேம் ஜி, எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு கடந்த நவம்பர் 25ஆம் தேதி வெளியான மாநாடு அதிரிபுதிரி ஹிட்டடித்துள்ளது.




டைம் லூப் கான்செப்ட்டும், அதனை கூறிய விதமும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது. படமும் 50 கோடி ரூபாய்க்கு வசூல் செய்துள்ளதால் சிம்புவின் ரீ எண்ட்ரி மாஸாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். 


சிம்புவின் நடிப்பு மட்டுமின்றி இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பும் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. மாநாடு படத்துக்கு பிறகு சிம்புவுக்கும், எஸ்.ஜே. சூர்யாவுக்கும் வாய்ப்புகள் குவிகின்றன எனவும் கோலிவுட்டில் பேசப்படுகிறது.






மாநாடு படம் எந்த ஓடிடியில் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் இருந்தது. இந்தச் சுழலில் மாநாடு சோனி லிவ் ஓடிடியில் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஓடிடியில் வெளியாகும் தேதி மட்டும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் மாநாடு திரைப்படம் டிசம்பர் 24-ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Maanaadu | மாநாடு தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்த டி.ராஜேந்தர்.!! எல்லாம் பழைய பிரச்னை!!


Maanaadu OTT | ‛Loop Starts SOON’ - ஓடிடி-யில் மாநாடு... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


Maanaadu 2 | ‛மாநாடு கொஞ்சம்... மங்காத்தா கொஞ்சம்’ - மாநாடு 2 பிளானை பகிர்ந்த வெங்கட் பிரபு!


SJ Suryah Maanadu | மாநாடு எஸ்.ஜே.சூர்யா ரோலுக்கு முதலில் கமிட்டானவர் வேறு ஹீரோ! இதுதான் சிக்கலாம்!