Maanaadu OTT | ‛Loop Starts SOON’ - ஓடிடி-யில் மாநாடு... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

எப்போதாம்பா ஓடிடியில வெளியிடுவீங்க என சில தரப்பு ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

Continues below advertisement

சிலம்பரசன் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் முதன் முறையாக வெளியான திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் பட்டி தொட்டியெங்கும் சூப்பர் ஹிட். படம் வெளியாவதற்கு முன்பு பல இன்னல்களை சந்தித்திருந்தாலும் , வெளியான பிறகு பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனை குவித்து வருகிறது. முன் எப்போதும் சிம்பு படங்களுக்கு கிடைக்காத வெற்றி மாநாடு படத்திற்கு கிடைத்திருக்கிறது. சமீப காலமாக கோலிவுட்டில் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வந்த சிலம்பரசனுக்கு , மாநாடு திரைப்படம்  மாபெரும் கம் பேக்காக பார்க்கப்படுகிறது.என்னதான் படம் திரையரங்குகளில் ரிலீஸானாலும் ..எப்போதாம்பா ஓடிடியில வெளியிடுவீங்க என சில தரப்பு ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல  SONYliv international  நிறுவனம் அது குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Continues below advertisement


அதில் “ மிகப்பெரிய பிளாக்  பஸ்டர் ஹிட் கொடுத்த மாநாடு திரைப்படப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. லூப் விரைவில் தொடங்கும் “ என குறிப்பிட்டுள்ளது. எப்படியும் பண்டிகை நாளை குறி வைத்துதான் வெளியாகும் என்பதால் வருகிற கிருஸ்துமஸ் பண்டிகை அன்று மாநாடு திரைப்படத்தை ஓடிடியில் எதிர்பார்க்கலாம் என்கின்றனர் சிலர்.

படம் பலரின் பாராட்டை பெற்ற நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் கூட மாநாடு படத்தை வெகுவாக பாராட்டியிருந்தார். மாநாடு திரைப்படம் இசுலாமிய மக்கள் குறித்துப் பரப்பப்படும் கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாகி, கோவை கலவரத்தில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போகிறபோக்கில் பேசி, அவர்கள் குறித்துப் பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் தவறானப் பிம்பத்தை தகர்த்தெரியும் விதத்திலான வசனங்களையும், காட்சிகளையும் படத்தின் கருப்பொருளாக அமையச் செய்திருப்பது இத்திரைப்படத்தின் சிறப்பு. என தெரிவித்திருந்தார்.

அரசியல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷினி நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஒய்.ஜி.மகேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் சிம்பு தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் கிளிம்ஸ் ஏற்கனவே வெளியான நிலையில் , மாநாடு திரைப்படத்தின் வெற்றி சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola