Watch Video: விநாயக் மகாதேவும், அப்துல் காலிக்கும் - வெங்கட்பிரபு பகிர்ந்த சுவாரஸ்ய வீடியோ

எஸ்.ஜே. சூர்யா சிம்புவுக்கு கட்டளை இடுவதற்கு பதிலாக மங்காத்தா படத்தில் அஜித் அர்ஜுனிடம் பேசும் காட்சிகளை இணைத்து சிம்புவுக்கு அஜித் கட்டளை இடுவதுபோல் உருவாக்கப்பட்டிருக்கிறது

Continues below advertisement

மாநாடு படத்தில் சிம்புவை எஸ்.ஜே.சூர்யா மிரட்டுவதற்கு பதிலாக அஜித் மிரட்டினால் எப்படியிருக்கும் என்பதை எடிட் செய்து சுவாரஸ்ய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதை மாநாடு படத்தின் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  

Continues below advertisement

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் பல தடைகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

நீண்ட வருடங்களாக ஒரு வெற்றிக்கு காத்திருந்த சிம்புவுக்கு இந்தப் படம் அதனை கொடுத்துள்ளது. மாநாடு வெற்றியைத் தொடர்ந்து சிம்புவின் க்ராஃப் ஏற தொடங்கியுள்ளது. பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் சிம்புவின் கால்ஷீட் கேட்டு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் பாராட்டினர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர்கள் செல்வராகவன், வசந்தபாலன் உள்ளிட்டோர் மாநாடு படத்தை பார்த்துவிட்டு படக்குழுவுக்கு தங்களது வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்தனர்.


திரையுலகினர் பாராட்டு மட்டுமின்றி மாநாடு படத்தில் இடம்பெற்ற காட்சிகளை நெட்டிசன்கள் பலவிதமாக எடிட் செய்தும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

 

அந்தவகையில் தற்போது மாநாடு படத்தின் காட்சியையும், வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மங்காத்தா படத்தின் காட்சிகளையும் சேர்த்து எடிட் செய்து ரசிகர் ஒருவர் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவானது, எஸ்.ஏ. சந்திரசேகரை கொல்வதற்கு எஸ்.ஜே. சூர்யா சிம்புவுக்கு கட்டளை இடுவதற்கு பதிலாக மங்காத்தா படத்தில் அஜித் அர்ஜுனிடம் பேசும் காட்சிகளை இணைத்து சிம்புவுக்கு அஜித் கட்டளை இடுவதுபோல் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து, “சூப்பர்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அந்த வீடியோவை அதிகம் பேர் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் வாசிக்க: நார்வே திரைப்படவிழாவில் விருதுகளை அள்ளிய மாநாடு! என்னென்ன விருதுகள் தெரியுமா?

Alphonse Puthren: என்ன கைமாறு செய்ய போறேன்னு தெரியல.. மாநாடு குழுவை பாராட்டி உருகிய பிரேமம் டைரக்டர்..!

Cryptocurrency Malware: படம் டவுன்லோடில் அபாயம்! புதிய வைரஸை களமிறக்கும் மோசடி கும்பல் - கிரிப்டோ கரன்சிக்கும் குறி!!

Continues below advertisement
Sponsored Links by Taboola