டிக்- டாக்' வீடியோ போதையில் பலரும் தங்கள் வாழ்க்கையை இழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர். சிலர் உயிரையும் இழந்துள்ளனர். ஆனால் டிக்- டாக்கில் சிலருக்கு அவச்சொல் ஏற்பட்டாலும் அதை கண்டு கொள்ளாமல் அதையே வருமானமாக மாற்றினர். டிக் - டாக் செயலி தடை செய்யப்பட்டாலும் அதில் இருந்து மீளமுடியாத சிலர் இணையத்தில் இளையோர்களை தொடர்ந்து தவறான வழியில் நடத்த முயற்சிக்கின்றனர். இணையத்தில் பல்வேறு நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதனை பின்பற்றாமல் யூடியூப்பர் மதனை போல பலரும் குறுக்கு வழியில் பணம் ஈட்டி வருகின்றனர்.
இதை கொஞ்சம் கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
டிக்டாக் பிரபலங்களாக பார்க்கப்படும் ஜி.பி.முத்து, ரவுடி பேபி சூர்யா, வணக்கமுங்க சீலா, சேலம் மணி, திருச்சி சாதனா, காத்துக் கருப்பு கலை உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என நெட்டிசன் தொடர்ந்து கமெண்ட் அடித்து வருகின்றனர். கொரோனா ரணகலத்திலும் இவர்கள் குதுகளமாக பணம் சம்பாதித்து வருகின்றனர். இந்நிலையில்
டிக் - டாக் பிரபலம் என சூர்யாதேவி என்பவர் கடந்த 2ஆம் தேதியன்று மதுரை சுப்ரமணியபுரம் காய்கறி சந்தை பகுதியில் வசிக்கும் சிக்கா என்ற சிக்கந்தர் பைக்கில் வந்தபோது தான் அணிந்திருந்த செருப்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வீடியோ ஒன்று வெளியானது. டிக் டாக் ஒழிந்தாலும் அதில் பயணித்தவர்களின் சேட்டை இன்னும் குறையவில்லை என்பது போல் அதனை பலரும் பகிர்ந்தனர். இந்நிலையில் சூர்யா தேவி தாக்கியது தொடர்பாக சிக்கந்தர் சுப்ரமணியபுரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சூர்யா தேவி மீது நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.
மதுரை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - அழுகிய மீன் 500 கிலோ... கெட்டுப் போன 50 ஆயிரம் ஆவின் பால் பாக்கெட்! ஒரே நேரத்தில் இரு நாற்றங்கள் !
இந்த புகாரை அளிக்கும் போது சூர்யாதேவி சிக்கந்தரை அடிக்கும் காட்சிகளை ஆதரமாக அளித்தார். காவல்துறையினர் புகாரை பெற்று நடவடிக்கை எடுத்துள்ளனர். புதிய யுக்தியை பயன்படுத்தி சம்பாரிக்கிறேன் என்ற நோக்கில் நடத்தப்படும் நாடகம் சில நேரங்களில் விபரீதமாக முடிகிறது. டிக்டாக் செயலிகளில் இருந்து வெளிவந்தாலும் அதன் தாக்கம் சூறாவளியாய் சுற்றி, சுற்றி தாக்குகிறது. டிக் டாக்கில் சிக்கி வெளிவற முடியாத நபர்கள் மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றுக்கொள்வது அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!