தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை சில மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த மாநில பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் அனைத்து வழிப்பாட்டு தலங்களுக்கு மக்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்தது ஊரடங்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது.  கொரோனா தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் தொற்றின் பரவலை கட்டுபடுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக 3வது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்க வாய்ப்புகள் உள்ளதாக உலக பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகையால் மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.


இதன்படி திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரபடுத்தி உள்ளது. குறிப்பாக கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்தும் நடைபெற்று வருகிறது.




திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலைகளிலும் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு  செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் கர்ப்பிணிகள் பட்டியலை தயாரித்து அவருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த ஜீலை மாதம் வரை அரசு  மருத்துவமனையில் 20 பேர்களும் ,இதில் கிராமப்புறத்தில் உள்ள மருத்துவமனைகளில் 4,328 பேர்களும், நகரப்பகுதியில் 1,015 பேர்களும், என மொத்தம் 5,363 கர்ப்பிணிகள் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை  செலுத்திக்கொண்டுள்ளனர். மேலும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி இதுவரை 6 மட்டுமே செலுத்தி உள்ளனர், என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 




தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மேலும் இனி வரும் காலங்களில் மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், முக கவசம், சமூக இடைவெளியை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும், மேலும் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா 3 அலையில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ள முடியும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


திருச்சி மாவட்டத்தில் மக்கள் அதிக அளவில் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளி பின்பற்றாமலும், பல இடங்களில் இயல்பாக சுற்றித்திரிவது தொற்றின்  எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகையால் விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. அதன்படி காவல்துறையும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணிப்பிலும் விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதித்து வருகிறார்கள்.மேலும்  பொதுமக்கள் முழுமையாக அரசு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.