உலக நாயகன் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன். பாடகியான இவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார்.


ஸ்ருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கெல் கார்சல் என்பவரை காதலித்துவந்தார். ஆனால் அவர்களது காதல் கடந்த 2019ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. 


அந்தக் காதல் முறிவு குறித்து பேசிய ஸ்ருதிஹாசன், “காதலுக்கு விதி என்றும் எதுவும் இல்லை.  காதல் முறிவால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இது ஒட்டுமொத்தமாக எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.




நான் நிறைய கற்றுக்கொண்டேன் அது ஒரு கற்றல் அனுபவம். நான் ஒரு சிறந்த காதலுக்காக காத்திருக்கிறேன். அது கிடைத்தால், மகிழ்ச்சியாக உங்களிடம் நான் பகிர்ந்துகொள்வேன் ” என்று குறிப்பிட்டிருந்தார்.


இதனையடுத்து அவர் டெல்லியை சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்துவருகிறார்.  சாந்தனுவுடனான தனது காதல் குறித்து ஸ்ருதிஹாசன் அவரது 35ஆவது பிறந்தநாளன்று பொதுவெளியில் கூறினார். அதுமட்டுமின்றி அவரை சென்னைக்கு அழைத்து வந்து தனது தந்தையான கமல்ஹாசனிடமும் அறிமுகம் செய்துவைத்தார்.




இந்நிலையில், ஸ்ருதிஹாசன் 2021ஆம் ஆண்டு முடிவடையப்போவதையொட்டி என்னிடம் எதையும் கேளுங்கள் என்று சமூக வலைதளங்களில் கூறியிருந்தார்.


அதன்படி அவரிடம் ரசிகர்கள் ஏராளமான கேள்விகளை கேட்டனர்ர். அப்போது ஒருவர், உங்களுக்கு இதுவரை எத்தனை பிரேக் அப்கள் என்று கேள்வி கேட்டார்.




அதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், உங்களுக்கு எத்தனை தோழிகள் இருந்தார்கள்? பூஜ்ஜியம் அல்லது பாதியாக இருக்கலாம் என்று யூகிக்கிறேன் என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Kamalhaasan On Ilayaraja | இளமை மாறாத இளையராஜா.. அண்ணனுக்கு.. கமல்ஹாசன் பதிவிட்ட ஸ்வீட் ட்வீட்..


Chennai Rains: கடந்த 35 ஆண்டுகளில் சென்னையில் எப்போதெல்லாம் கொட்டித்தீர்த்தது தெரியுமா? முழு டேட்டா இதோ!


Valimai Update: விறுவிறுன்னு ஓடுமா 3 மணிநேரம்..வலிமை படத்தின் தணிக்கைக்குழு தகவல்கள்!


ஒரு பொய் நியூஸ்! ரஜினி சான்ஸும் போய்ட்டு! 1000 கோடி வசூலும்.. - புலம்பும் பிரேமம் இயக்குநர்