2021ஆம் ஆண்டு இன்றோடு முடிவடைந்து புதிய ஆண்டு நாளை பிறக்க இருக்கிறது. மக்களும் இந்த ஆண்டில் தாங்கள் சந்தித்த அனைத்து விரும்பத்தகாத நினைவுகளையும் அழித்துவிட்டு மீண்டும் புதிதாக பிறக்க தயாராக இருக்கிறார்கள்.


அதுமட்டுமின்றி இன்றைய இரவை கொண்டாட்டங்களோடு நகர்த்திடவும் தயாராகி இருக்கின்றனர். அதேசமயம் சமீபமாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.




இந்த சூழலில் இசைஞானி இளையராஜா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், கடந்த 39 வருடங்களாக புத்தாண்டுக்கு ஒலிக்கவிடப்படும் பாடலான இளையராஜா இசையில் எஸ்பிபி பாடிய “இளமை இதோ இதோ” பாடலை பாடி ஒரு குழந்தையாக பிறந்து அனைவருக்கு உற்சாகத்தை ஊட்டியிருந்தார்.






அந்த வீடியோவை பார்த்த அனைவரும் வலிமை ட்ரெய்லரை ஓரமாக வைத்துவிட்டு இளையராஜாவின் இளைமை இதோ இதோவை பகிர்ந்துவருகின்றனர். மேலும் இளையராஜா பாடியதை பார்த்த பிறகு 2022ஆம் ஆண்டு மேல் மிகுந்த நம்பிக்கை தோன்றியிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.




இந்நிலையில், இளமை இதோ இதோ பாடலுக்கு திரையில் தோன்றி நடனமாடிய கமல் ஹாசன் இளையராஜா பாடிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “இளையராஜா அவர்களை 3 நாட்களுக்கு முன்புதான் சந்தித்தேன்.






இளமை மாறாத ராஜாவாக குதூகலமாக பேசிக்கொண்டிருந்தார். அதையும்விட இளமை கூடியவராய் இன்று இணையதளத்தில் இளமை இதோ இதோ என்று பாடியதைப் பார்த்தேன்.  மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு Happy New year” என பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண