சின்னத்திரை சீரியலுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சீரியல்களை இல்லத்தரசிகள், இளைஞர்கள் என பல தரப்பினரும் பார்க்கின்றனர். தற்போது நாம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபப்பாகி வரும் சீதா ராமன்  சீரியல் குறித்து தான் பார்க்க போகின்றோம். 


இந்த சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் கதைக்களம் நாளுக்கு நாள் விறு விறுப்பாக மாறி வருகின்றது. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சிங் கெட்டப்பில் ரவுடி வெளியே கிளம்ப சீதா தடுத்து நிறுத்திய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது, சீதா இதே ட்ரஸ்ஸ எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என கேட்க சுபாஷ் சிங் எல்லாரும் இப்படி தான் டிரெஸ் போடுவாங்க என சமாளித்து அனுப்ப சீதாவுக்கு சந்தேகமாகவே இருக்கு. அடுத்து அஞ்சலி, ப்ரியா, காவ்யா என மூவரும் இதே கடத்தல் பற்றி பேச சீதாவுக்கு மகா வேலை தான் என்பது உறுதியாகிறது.  ‌


அதை தொடர்ந்து சீதா மகாவை சந்தித்து என்னை கடத்தியது நீங்க தான் எனக்கு நல்லா தெரியும் என அதிர்ச்சி கொடுக்கிறார். நீங்க என்னை டிஸ்டர்ப் பண்ணாமல் இருந்தால் நல்லது என வார்னிங் கொடுக்க மகா இல்லன்னா என்னடி பண்ணுவ என மிரட்டுகிறாள்.


கொலை கேஸ்ல உள்ள போய்டுவீங்க, உங்க கிட்ட ஒவ்வொருத்தரையா பிரிச்சு தனிமரமா ஆக்கிடுவேன் என சீதா, மகாவை எச்சரிக்கிறார். அதை தொடர்ந்து அர்ச்சனா, மகா,உள்ளிட்டோர்  முதலில் ராம், சீதாவை பிரிக்க வேண்டும் என யோசிக்கின்றனர்.


சேதுவை ஆயுர்வேத சிகிச்சைக்கு அனுப்பி ராம், துரையை கூட அனுப்பி சீதாவை பழி தீர்க்க ப்ளான் போடுகின்றனர். டாக்டரை வைத்து கேரளா போக சொல்ல சேதுவும் சம்மதம் தெரிவிக்கிறார்.ராம் கூட செல்வதாக சொல்ல துரை இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய சீதா ராமன் சீரியலை பார்த்து தெரிந்து கொள்ளலாம். 


மேலும் படிக்க


Ajithkumar at Chennai Airport: ஸ்டைலாக சென்னை வந்திறங்கிய அஜித்! திடீர் வருகைக்கு என்ன காரணம்? வைரலாகும் வீடியோ


"ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது" மாநில அரசுகளின் உரிமைகளை மீண்டும் நிலைநாட்டிய உச்ச நீதிமன்றம்


Rinku Singh: ரிங்குசிங்கின் இந்த அபார வளர்ச்சிக்கு காரணம் இவர்தான்! தினேஷ் கார்த்திக் சொன்ன ரகசியம்!