Seenu Ramasamy Upcoming Film: பென்னிகுவிக் வாழ்க்கை படமாகிறது.... சீனு ராமசாமி இயக்குகிறார்!

சென்னை: முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கின் வாழ்க்கை வரலாறை படமாக்க இருப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு குடி நீர் ஆதாரமாக இருப்பது முல்லை பெரியாறு அணை. அணை அமைந்திருக்கும் இடம் கேரளாவுக்கு சொந்தமானதாக இருந்தாலும் அணையை தமிழ்நாடு பொதுப்பணித் துறை பராமரித்துவருகிறது. இந்த அணையை கட்டியவர் பென்னிகுவிக் ஆவார்.

Continues below advertisement

இந்த அணையானது சுண்ணாம்பு சுர்க்கி கலவையால் கட்டப்பட்டது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை, தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான, கரிகால சோழன் கட்டிய கல்லணையை ஆய்வு செய்த ஆங்கிலேய பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் அதனை, the great anacut என்று குறிப்பிட்டார். காட்டனின் அறிக்கையை படித்த பென்னிகுவிக், கல்லணையை கட்ட பயன்படுத்திய முறையையே முல்லை பெரியாறு அணை கட்டுவதற்கு பயன்படுத்த முடிவெடுத்தார். அதன்படி முல்லை பெரியாறு அணையும் கட்டப்பட்டது.

தனது சொந்தப் பணத்தை செலவு செய்து, ஊர் மக்களையும், பொறியாளர்களையும் கொண்டு இந்த அணையை கட்டிய பென்னிகுவிக்கை ஐந்து மாவட்ட மக்களும் கடவுளாகவே வழிபட்டுவருகின்றனர். வழிபடுவதோடு மட்டுமின்றி தங்களது குழந்தைகளுக்கு பென்னிகுவிக் பெயரை வைத்து தங்களது நன்றிக்கடனை தீர்த்துக்கொள்கின்றனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கும் சீனுராமசாமி பென்னிகுவிக் வாழ்க்கையை படமாக்க இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம் கர்னல் பென்னிகுவிக் வாழ்க்கை சரிதத்தை படமாக எடுக்க விழைகிறேன்” என பதிவிட்டுள்ளார். படத்தில் நடிக்க இருப்பவர்கள் குறித்தும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் விரைவில் அறிவிக்கப்படுமென தெரிகிறது.

 

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களும் ஜி.வி. பிரகாஷ் நடித்திருக்கும்  இடிமுழக்கம் படமும் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க:  Mullai Periyar Dam: தொல்லைகள் பல நூறு... அனைத்தையும் தாண்டிய முல்லை பெரியாறு! அணை அல்ல தென்மாவட்டத்தின் துணை!

MullaPeriyar Dam: தனது சொத்துக்களை விற்று முல்லை பெரியாறு அணையை கட்டினாரா பென்னி குவிக்?

பொள்ளாச்சி வழக்கை விசாரித்த டிஎஸ்பி வீட்டில் ரெய்டு... பெரிய அளவில் கை மாறியதா தொகை?

Continues below advertisement