தமிழ் சினிமாவில் முக்கியமான காமெடியன்கள் பட்டியலில் இடம்பிடித்திருப்பவர் நடிகர் சதீஷ்.  கிரேஸி மோகனின் நாடக குழுவில் நடித்து வந்த சதீஷ் அவரின் அன்புக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


தமிழ் படம் , மதராசப்பட்டினம், மான் கராத்தே, தாண்டவம், கத்தி, பைரவா, வேலைக்காரன் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான அண்ணாத்த , ஃபிரண்ட்ஷிப் உள்ளிட்ட படங்களில் காமெடியனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். 


இவர் கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கும் நாய் சேகர் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். படத்தில் சதீஷுக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பவித்ரா நடித்து வருகிறார்.


 






கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிக்கும் இப்படத்திற்கு அஜீஷ் இசையமைக்கிறார். அனிருத் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைத்திருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயனும் பாடல் எழுதுகிறார்.


 






இந்நிலையில் படம் 13ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்சார் முடிந்து படத்துக்கு U சர்ட்டிஃபிக்கேட் வழங்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: டீ, காபியில எத்தனை ஸ்பூன் சர்க்கரை போட்டு குடிக்கிறீங்க? ஆப்புகளை அடுக்குகிறார்கள் நிபுணர்கள்..


Video | Harris Jayaraj Birthday: ஹிட் இசை ஆல்பங்கள் எங்கேயும் எப்போதும்... ஹாப்பி பர்த்டே ஹாரிஸ் ஜெயராஜ்!