ஃபிட்னஸ் ஃபிரீக் :


இந்திய சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வர தொடங்கிவிட்டார் நடிகை சமந்தா. பாலிவுட் முதல் ஹாலிவுட் வரையில் சமந்தா அடுத்தடுத்து முன்னேற்றம் காண துவங்கியிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமந்தா தனது கடின உழைப்பால் தனக்கான அங்கீரத்தை பெற துவங்கியிருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை.  கடந்த 5 வருடங்களை ஒப்பிடும் பொழுது சமந்தா நிறைய மாற்றங்களை சந்தித்திருக்கிறார். தனிப்பட்ட வாழ்க்கையை தாண்டி அவர் ஃபிட்னஸில் அதிக அக்கறை செலுத்துகிறார் என்றுதான் சொல்ல வேண்டும் .


 




 


இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா , தனது அன்றாட நிகழ்வுகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். குறிப்பாக தனது உடற்பயிற்சி வீடியோவையும்தான்.ஒல்லி பெல்லியாக மாறிப்போன சமந்தாவின் டயட் பிளான் என்னவாக இருக்கும் என பலர் யோசித்து வந்த நிலையில் , ட்விட்டர் வாயிலாக ரசிகர் ஒருவர் அதனை கேள்வியாகவே கேட்டுவிட்டார்.







இதுதான் என் டயட் பிளான் :


ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த சமந்தா “ நான் அசைவம் உண்பதில்லை. பால் குடிப்பதில்லை. எனது உணவு ரொம்ப அடிப்படையானது . தினமும்  காய்கறிகள் சாப்பிடுவேன் ..நிறைய காய்கறிகளுடன் சோறும் சாப்பிடுவேன். எனக்கு சோறு சாப்பிட பிடிக்கும் .” என்றார். பொதுவாக டயட் என்றாலே அரிசி சம்பந்தப்பட்ட பொருட்களை முதலில் நீக்க வேண்டும் என்பதுதான் பயிற்சியாளர் கொடுக்கும் டிப்ஸாக இருக்கும் . ஆனால் சமந்தா தன்னால் சோறு சாப்பிடாமல் இருக்க முடியாது என அதனை தவிர்க்க முடியாத லிஸ்டில் வைத்திருக்கிறார். உண்மையில் சோறு சாப்பிடும் பொழுது உங்களுக்கு அதிகப்படியான மாவுச்சத்து கிடைக்கிறது. gluten இல்லாமல் இருக்கிறது. நீங்கள் உங்கள் உடலில் இருந்து மாவுச்சத்தை குறைத்தால் அது உங்களுக்கு சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். முன்னதாக சமர்ந்தா நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 







சொந்த காய்கறி தோட்டம் :


சமந்தா கொரோனா ஊரடங்கு சமயத்தில் சொந்தமாக காய்கறிகளை பதியம் போட துவங்கிவிட்டார் .அது குறித்து ஒருமுறை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பகிர்ந்திருந்தார். எனவே சமந்தா  தனது சொந்த தோட்டத்தில் விளையும் ஆரோக்கியமான காய்கறிகளைத்தான் தனது டயட் உணவில் சேர்த்துக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.