நாள்: 17.08.2022


நல்ல நேரம் :


காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


காலை 10.45 மணி முதல் மதியம் 11.45 மணி வரை


மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை


இராகு :


மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


குளிகை :


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


எமகண்டம் :


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


சூலம் - வடக்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே,


நண்பர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். கூட்டு வியாபாரத்தில் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். லாபம் நிறைந்த நாள்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே,


வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதிற்கு நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். மனதில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறைந்து சுதந்திரத்தன்மை மேம்படும். புதுவிதமான அனுபவத்தின் மூலம் புதிய கண்ணோட்டம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


மிதுனம் : 


மிதுன ராசி நேயர்களே,


மனதில் புதுவிதமான கற்பனைகள் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சமூக பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். எதிர்ப்புகள் குறையும் நாள்.


கடகம் :


கடக ராசி நேயர்களே,


தொழில் கல்வி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். விவசாய பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் அமையும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். அரசு சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். தேவைகள் நிறைவேறும் நாள்.


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே,


புதிய முயற்சிகளில் விடாப்பிடியாக செயல்பட்டு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். தகவல் தொடர்பு துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். மனை அபிவிருத்திக்கான எண்ணங்கள் கைகூடும். நன்மை நிறைந்த நாள்.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே,


குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். துரித உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு மேன்மையை ஏற்படுத்தும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் பிறக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே,


வாழ்க்கை துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் திறமைக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். இணையம் சார்ந்த வியாபாரத்தில் கவனம் வேண்டும். விருப்பங்கள் நிறைவேறும் நாள்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே,


இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். புத்துணர்ச்சியான சிந்தனைகளின் மூலம் புதிய தெளிவுடன் காணப்படுவீர்கள். மற்றவர்களை பற்றிய கருத்துக்களில் கவனம் வேண்டும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். ஆதாயம் நிறைந்த நாள்.


தனுசு :


தனுசு ராசி நேயர்களே,


சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்படும். கால்நடை தொடர்பான உதவி கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.


மகரம் :


மகர ராசி நேயர்களே,


வியாபாரம் நிமிர்த்தமான சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்வது உங்களின் மீதான மதிப்பை மேம்படுத்தும். குத்தகை தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். தாமதம் அகலும் நாள்.


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே,


உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சிறு மற்றும் குறு வியாபாரம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். வெளியூர் நிமிர்த்தமான வேலைவாய்ப்புகளில் முயற்சிக்கு உண்டான சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். வரவு மேம்படும் நாள்.


மீனம்:


மீன ராசி நேயர்களே,


எதிர்பாராத தனம் சார்ந்த உதவி கிடைக்கும். காப்பீடு சார்ந்த துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். வியாபார பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சிக்கல்கள் குறையும் நாள்.