செம்ம மாஸாக ஒரு வெயிட் லிஃப்டிங் வீடியோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவும், சமந்தாவும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோர்பர் மாதம் 6ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
4 வருடங்கள் சுமூகமாக சென்றுகொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. தாங்கள் விவாகரத்து செய்துகொள்வதாக சமந்தாவும், நாக சைதன்யாவும் அறிவித்தனர். அவர்களது இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
திருமண வாழ்விலிருந்து வெளியே வந்ததும் சமந்தாவின் கேரியர் முடிந்துவிடும் என்று பலர் கூறினாலும் தற்போதுதான் அவரது கிராஃப் கேரியரின் உச்சத்தில் இருக்கிறது. தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் அவர் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருந்தார். இந்தப் பாடலுக்கு பிறகு சமந்தாவுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதற்கிடையே திருமண முறிவுக்கு பிறகு நிறைய பயணங்கள் செய்வதையும் அவர் வாடிக்கையாக்கியுள்ளார். அதேபோல் தனது உடல்நலனில் மிகுந்த அக்கறை காட்டும் சமந்தா ஜிம்முக்கு சென்று வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துவருகிறார். அதை ரசிகர்களும் கொண்டாடுகின்றனர்.
அந்தவகையில் சமந்தா தற்போது ஜிம் ஒன்றில் பளு தூக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சமந்தா 80, 78, 75 கிலோ பளுவை தூக்குகிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
முன்னதாக, திருமண முறிவு குறித்து வாய் திறக்காமல் இருந்த நாக சைதன்யா சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “அந்தச் சூழ்நிலையில் அது சரியான முடிவாக இருந்தது. சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்” என கூறியிருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Bigg Boss Tamil 5 Finale: டாப் 5-ல் முதலில் வெளியேற்றப்பட்டாரா நிரூப்? - பிக்பாஸ் ஃபைனல் அப்டேட்ஸ்