Bigg Boss 5 Tamil Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமான், அபினய், அக்‌ஷரா, வருண், சஞ்சீவை அடுத்து ஜனவரி 9-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் தாமரைச்செல்வி எலிமினேட் செய்யப்பட்டார்.


இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 5-ன் இறுதி எபிசோட் நாளை ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், அதற்கான சூட்டிங் இன்று தொடங்கி இருக்கிறது. ப்ரியங்கா, பாவனி, ராஜூ, அமீர், நிரூப் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து முதலாவதாக நிரூப் வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


இறுதி எபிசோடின் படப்பிடிப்பு இன்று காலை 9 மணி தொடங்கி இருப்பதாகவும், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் இறுதிச்சுற்று போட்டியாளர்களில் நிரூப்பை நடனக்குழு சென்று வெளியே அழைத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


நேரலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு காண:



இறுதி நிகழ்ச்சியில், இந்த சீசனை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இறுதிப்போட்டியாளர் ஒவ்வொருவருக்கு ஒரு பரிசளித்திருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இதனால், 104-வது நாளான இன்றைய எபிசோடும், நாளை ஒளிபரப்பாக இருக்கும் கடைசி எபிசோடும் சுவாரஸ்யமாக இருக்கும் என தெரிகிறது.






டாப் 5 போட்டியாளர்கள் முடிவானதில் இருந்து, இவர்தான் வெற்றியாளர் என கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், பிக் பாஸ் சீசனின் வெற்றியாளர் ராஜூ எனவும், இரண்டாம் இடத்தில் ப்ரியங்கா, பாவனிக்கு மூன்றாம் இடமும், நிரூப் நான்காம் இடமும் அமீர் ஐந்தாம் இடத்தையும் பிடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், கடைசி நேர மாற்றம் என சொல்லியும், எதிர்ப்பார்க்காததை எதிர்பாருங்கள் என்று காரணம்காட்டியும் பிக் பாஸின் வெற்றியாளர்கள் மாறிப்போவதற்கான வாய்ப்புகளும் உண்டு. 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்