பிரபல தென்னிந்திய நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா தன்னுடைய திருமணம் பற்றிய அறிவிப்பை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
மலையாள சினிமாவில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கு, தமிழ் எனக் கலக்கி இன்று தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி (Sai Pallavi). தற்போது தமிழில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனின் எஸ்.கே.21 படத்தில் நடித்து வருகிறார்.
சாய் பல்லவியின் செல்ல தங்கை
மற்றொருபுறம் சாய் பல்லவி அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அவரது தங்கையும் நடிகையுமான பூஜா கண்ணன் (Pooja Kannan).
'சித்திரை செவ்வானம்' எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பூஜா, இந்த ஒரு படத்துக்குப் பிறகு பெரிதாக படங்களில் கமிட் ஆகவில்லை. எனினும் தன் அக்காவுடனான செல்ஃபிக்கள் மற்றும் சோஷியல் மீடியா பதிவுகள் மூலம் தொடர்ந்து பூஜா லைம்லைட்டிலேயே இருந்து வருகிறார்.
இந்நிலையில், தன் காதலர் மற்றும் வருங்கால வாழ்க்கைத் துணையை அறிமுகப்படுத்தி பூஜா கண்ணன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.
உணர்ச்சிகர பதிவு
“இந்த க்யூட்டான சிறிய பட்டன் வாழ்க்கையில் தன்னலமற்று எப்படி காதலிப்பது, காதலில் எப்படி திளைத்திருப்பது என எனக்கு கற்றுத் தந்துள்ளது. இவர் தான் வினீத். என் க்ரைம் பார்ட்னர்.. இப்போது என் வாழ்க்கை பார்ட்னரும் கூட” என உணர்வுப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார். மேலும் தங்கள் காதல் தருணங்களின் அழகான வீடியோ தொகுப்பினையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
சாய் பல்லவியின் கோபம்
நடிகை சாய் பல்லவிக்கு திருமணம் என பல்வேறு வதந்திகள் கடந்த சில மாதங்களாக இணையத்தை ஆக்கிரமித்து வந்த நிலையில், வதந்தி பரப்பியவர்களை சாடி கடுகடுத்து பதிவிட்டு, சாய் பல்லவி தன் திருமண செய்திகளுக்கு முன்னதாக முற்றுப்புள்ளி வைத்தார்.
இச்சூழலில் சாய் பல்லவியின் தங்கை சர்ப்ரைஸாக யாரும் எதிர்பாராத வகையில் திருமண செய்தி சொல்லியிருப்பது இருவரது ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு இணையவாசிகள் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!
Captain Miller Review: "தரமான ஆக்ஷன் விருந்து" தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!