இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இதையடுத்து, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மூன்றாவது டி20 போட்டியில் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் இன்று சில மாற்றங்களை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மண்ணில் டி20 உலகக் கோப்பை விளையாட உள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக இந்திய அணி தனது கடைசி டி20 போட்டியில் இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. இருப்பினும், இதற்குப் பிறகு, இந்திய வீரர்கள் அனைவரும் ஐ.பி.எல்.லில் விளையாடுவார்களே தவிர, எந்தவொரு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாட மாட்டார்கள்.
உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணிக்கு கடைசி வாய்ப்பு?
டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி தனது சிறந்த 11 வீரர்களை நிர்ணயிக்க விரும்புகிறது. இந்திய அணிக்கு சரியான வீரர்கள் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. வெவ்வேறு வீரர்கள் தொடர்ந்து உள்ளே களமிறக்குவது, உட்காரவைக்கப்படுவதுமாய் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதன் காரணமாக, டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி எந்த 11 பேரை களமிறக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தக் கேள்வி இன்னும் உள்ளது. உதாரணமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்றைய 3வது டி20 போட்டியில் இந்திய அணி தனது சிறந்த 11 வீரர்களை வைத்து விளையாட விரும்புகிறது. இருப்பினும், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் விளையாடும் 11-ஐ எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
மூன்றாவது டி20 போட்டி பெங்களூரில்...
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. மூன்றாவது டி20யில் வெற்றி பெற்று தொடரில் ஆப்கானிஸ்தானை துடைத்தெறிய வேண்டும் என்று இந்திய அணி விரும்புகிறது. அதேசமயம் ஆப்கானிஸ்தான் அணி கிளீன் ஸ்வீப்பை தவிர்க்க விரும்புகிறது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்றாவது போட்டி புதன்கிழமை (இன்று) பெங்களூரில் உள்ள என். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணியில் மாற்றங்கள் இருக்குமா..?
மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடும் 11 பேரில் நிறைய மாற்றங்களை செய்யப்படலாம் என நம்பப்படுகிறது. இன்றைய போட்டியில் அவேஷ் கான் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் அணிக்கு திரும்பலாம். அதன்படி,வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக குல்தீப் யாதவ் வாய்ப்பு பெறலாம். மேலும், முகேஷ் குமாருக்குப் பதிலாக அவேஷ் கானும், ஜிதேஷ் சர்மாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனும் களமிறங்க படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கணிக்கப்பட்ட இரு அணிகள் விவரம்:
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சிவம் துபே, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார்.
ஆப்கானிஸ்தான் அணி:
ரெஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், கரீம் ஜனத், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன்-உல்-ஹக் மற்றும் ஃபசல்ஹாக் ஃபரூக்கி.