பிரேமம் படத்தில் மூன்று நாயகிகளுள் ஒருவராக வந்து ரசிகர்களின் மனதில் ‘மலர் டீச்சராக’ இடம் பிடித்தவர் சாய் பல்லவி. எந்த படத்தில் நடித்தாலும், கொஞ்சம் கூட கவர்ச்சி காட்டாத இவரது நடிப்பும், பெரிதும் மேக்-அப் போடாத இவரது இயற்கையான அழகும் அனைவரையும் வசீகரித்தது. இதுவரை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மும்மொழி படங்களில் அந்தந்த திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். இவர், அஜித்தின் துணிவு படத்திலும் விஜய்யின் லியோ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் வேண்டாம் என கூறிவிட்டதாக சமூக வலைதளங்கள் முழுவதும் தகவல்கள் பரவி வருகின்றன.
‘வெயிட்’ கதாப்பாத்திரங்களை எதிர்பார்க்கிறாரா?
நடிகர் அஜித்குமார் நடித்திருந்த ‘துணிவு’ படம், சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையக்கிளப்பியது. இப்படத்தில், மஞ்சு வாரியர் நடித்திருந்த கண்மணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடைப்பெற்றதாம். ஆனால், அந்த கதாப்பாத்திரத்திற்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லாததால் அதில் நடிக்க சாய் பல்லவி மறுத்துவிட்டாராம்.
இதையடுத்து, விஜய் நடித்துவரும் அவரது 67ஆவது படத்திலும், த்ரிஷா தற்போது நடித்துவரும் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பும் சாய் பல்லவிக்கு கிட்டியதாம். இந்த கதாப்பாத்திரத்திற்கும் படத்தில் பெரிதாக முக்கியத்துவம் இல்லாததால் அந்த வாய்ப்பையும் தட்டிக்கழித்து விட்டாராம். இப்படி சாய் பல்லவி குறித்த செய்திகளும், பதிவுகளும் ட்விட்டர் உள்பட பல சமூக வலைதள பக்கங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. இதனால், “ஒரு வேலை சாய் பல்லவி வெயிட்டான கதாப்பாத்திரங்களில்தான் நடிப்பாரோ?” என பல ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
இதுவரை சாய் பல்லவி நடித்த கதாப்பாத்திரங்கள்:
2005ஆம் ஆண்டில் மீரா ஜாஸ்மின்-பிரசன்னா நடித்திருந்த கஸ்தூரி மான் என்ற படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார், சாய் பல்லவி. ஓரிரு படங்களில் துணை கதாப்பாத்திரமாக வந்த இவர், பிரேமம் படத்திற்கு பிறகு நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இவர் கடைசியாக நடித்திருந்த கார்கி படமே அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இதுதவிர, நானியுடன் இவர் நடித்திருந்த ஷ்யாம் சிங்கா ராய் படத்திலும் தனக்கு கொடுத்திருந்த கதாப்பாத்திரத்தில் நல்ல நடிப்பையே வெளிப்படுத்தியிருந்தார்.
Also Read|Alia Bhatt: ஆஸ்கர் வென்ற ஆர்.ஆர்.ஆர்... கண்டுக்கொள்ளாத ஆலியா பட்.. கொதித்தெழும் நெட்டிசன்கள்..!
சாய் பல்லவியின் பிற திறமைகள்:
நடிகை சாய் பல்லவி, நடிப்பிற்கு மட்டுமல்ல நன்றாக நடனமாடுவதற்கும் பெயர் போனவர். 2008ஆம்ஆண்டு தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட நடைப்பெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா? நிகழச்சியில் பங்கேற்பாளராக இருந்து பாதியிலேயே எலிமினேட் செய்யப்பட்டார். இதையடுத்து, 2018ஆம் ஆண்டு வெளியான மாரி-2 திரைப்படத்தில் அராத்து ஆனந்தியாக களமிறங்கிய இவர், ரெளடி பேபி பாடலில் தனது நடன அசைவுகளால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தனார். இப்பாடலுக்கு ஜனி மாஸ்டரும் பிரபுதேவாவும் நடன கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமன்றி இவர் எம்.பி.பி.எஸ் படித்தவர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்க விஷயம்.
சாய் பல்லவியின் அடுத்த படம் என்ன?
டான், பிரின்ஸ் படங்களின் நாயகன் சிவகார்த்திகேயனுடைய அடுத்த படத்தில், சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக கோலிவுட்ட வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது. இப்படத்தில் அவரது கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை பொருத்திரு்ந்துதான் பார்க்க வேண்டும். சாய் பல்லவிக்கு தென்னிந்திய அளவில் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளனர். அதில் பாதி பேர், அஜித்-விஜய்யின் ரசிகர்கள். அவர்கள் அனைவரும், தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படத்தில் நடிக்க சாய் பல்லவி மறுத்துள்ள தகவலை கேட்டு ‘அப்செட்’ ஆகியுள்ளனர். மேலும், நடிகை த்ரிஷாவே தனக்கு முக்கியத்துவம் கொடுக்காத கதாப்பாத்திரத்தை தேர்வு செய்யமாட்டார் என்றும், துணிவு படத்தில் மஞ்சு வாரியருக்கு கொடுக்கப்பட்டிருந்த கதாப்பாத்திரமும் படத்தில் மிக முக்கிமானதுதான் என்றும் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதனால், சாய் பல்லவி இப்படி பேசியதாக கூறப்படும் விஷயம் வதந்தியாக் கூட இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.