காஞ்சிபுரம் அருகே ஐயங்கார் குளம் கிராமத்தில் வரைபட அனுமதி வழங்க ரூபாய் 15,000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவி வேண்டா சுந்தரமூர்த்தி கைது.

 

ஐயங்கார் குளம் ஊராட்சி

 

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம்  ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஐயங்கார் குளம் ஊராட்சி மன்ற தலைவராக வேண்டா சுந்தரமூர்த்தி ஊராட்சி பதவி வகித்து வருகிறார். இவர் அதிமுக ஆதரவாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஐயங்கார் குளம் பகுதியில் வீட்டுமனை வாங்கி அதில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளார். 

 

தொடர்ந்து பணம் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளனர்

 

இதனை அடுத்து வீடு கட்டுவதற்கான திட்ட அனுமதி பெறுவதற்காக ஐயங்கார் குளம் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டா சுந்தரமூர்த்திடம் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் திட்டம் அனுமதி கொடுக்க வேண்டுமென்றால் லஞ்சமாக 15 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என கிருஷ்ணமூர்த்தியை தலைவர் வேண்டா சுந்தரமூர்த்தி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் ஐயங்கார் குளம் ஊராட்சி செயலாளராக உள்ள புவனா என்பவரும் தொடர்ந்து பணம் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி மனமுடைந்து இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

 

போலீசார் பதுங்கி இருந்துள்ளனர்

 

இதனை எடுத்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் காவல்துறையினர் திட்டமிட்டு, ரசாயன  தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு துறைவு போலீசார் கிருஷ்ணமூர்த்தியிடம் அளித்துள்ளனர். இதனை அடுத்து யாருக்கும் சந்தேகம் வராத வண்ணம், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே போலீசார் பதுங்கி இருந்துள்ளனர்.

 

கைது செய்து அவர்களிடம் விசாரணை

 

அப்பொழுது கிருஷ்ணமூர்த்தி லஞ்சம் பணத்தை தலைவர் வேண்டா சுந்தரமூர்த்தி அறிவுறுத்தலின் அடிப்படையில், ஊராட்சி செயலர் புவனாவிடம் 15 ஆயிரம் ரூபாயை அளித்துள்ளார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களமாக ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டா சுந்தரமூர்த்தி கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ஐயங்கார் குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 



Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண