ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். படம் சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற நிலையில் அப்படத்தில் நடித்த நடிகை ஆலியா பட் பெரிய அளவில் கண்டுக் கொள்ளாததால் ரசிகர்கள் டென்ஷனாகியுள்ளனர். 


95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் All Quiet on the Western Front, Everything Everywhere All at Once, The Whale, அவதார் -2 , பிளாக் பேந்தர் வுகாண்டா ஃபார் எவர், ஆர்.ஆர்.ஆர். உள்ளிட்ட பல படங்கள் ஆஸ்கர் விருதுகளை வென்றது. இந்தியாவில் இருந்து 3 படங்கள் விருதுக்கான  பட்டியலில் இடம் பெற்ற நிலையில் c சிறந்த ஆவண குறும்படம் பிரிவிலும், ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடல் பிரிவிலும் ஆஸ்கர் விருதுகளை வென்றது. 


 எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்தாண்டு ஆர்.ஆர்.ஆர். படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்திருந்தனர். கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம் வசூலில் மாபெரும் சாதனைப் படைத்துள்ளது. 


இந்தியாவே இந்த விருது வென்றதை கொண்டாடும் நிலையில் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழையை ஆர்.ஆர்.ஆர்., The Elephant Whisperers படக்குழுவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடித்த நடிகை ஆலியா பட் மட்டும் பெரிய அளவில் வாழ்த்துகளை தெரிவிக்கவில்லை. மாறாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் விருது வழங்கிய புகைப்படங்களை மட்டும் பகிர்ந்திருந்தார். 


அதேபோல் ஆலியாவின் கணவரும், நடிகருமான ரன்பீர் கபூர் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளியான Tu Jhoothi Main Makkaar படத்திற்கு மட்டும் ஆலியா வாழ்த்து தெரிவித்திருந்தார். இது ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுதொடர்பான பல கருத்துகளை பதிவிட்டு ஆலியாவை கடுமையாக விமர்சித்து வருகின்ற்னார். ஏற்கனவே ஆர்.ஆர்.ஆர். படத்தில் தன்னுடைய கேரக்டர் வலுவாக இல்லை என்றும், தனக்கு அதிக காட்சிகள் கொடுக்கப்படவில்லை என்று கூறி ஆலியா இயக்குநர் ராஜமௌலி மீது கோபத்தில் இருந்ததாக கூறப்பட்டது. பின்ன ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரம் படத்தின் தென்னிந்திய ப்ரோமோஷனில் இயக்குநர் ராஜமெளலி பங்கேற்றிருந்தார். 


ஆனால், அவர் இயக்கத்தில் தான் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருது வென்ற நிலையில்  ஆலியா , ஒரு வாழ்த்து கூட சொல்லாதது பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.