ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டில் வெளியான படம் அவதார்.  வெளியான வெகு சீக்கிரத்திலேயே, டைட்டானிக்கின் Highest Grossing Film (மிக அதிக வசூல் செய்த திரைப்படம்) எனும் ரெக்கார்டை ப்ரேக் செய்தது. 3டி வடிவில் உருவான இப்படம், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.  வேற்று கிரகத்தில் வாழும் நவி இன மக்களின் வளங்களை திருடும் மனிதர்கள், அதற்கு எதிராக போராடும் நவி மக்கள், இவர்களுக்கு துணையாக நிற்கும் ‘ஹைப்ரிட்’ அவதாரான ஹீரோ, இவர்களைச் சுற்றி சுழலும் சையின்ஸ் பிக்ஷன் கதைதான் அவதார்.


அவதார் படத்தின் இரண்டாம் பாகம், அவதார் தி வே ஆஃப் வாட்டர்  (Avatar:The Way Of Water) என்ற பெயரில் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் 2 ட்ரெய்லர்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இப்படத்திற்கான டிக்கெட் புக்கிங்கும் சில நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. 




ஒரு டிக்கெட்டின் விலை இவ்வளவா?


அவதார் படத்திற்காக 13 ஆண்டுகளாக தவமாய் தவமிருக்கும் பல ரசிகர்கள், அவதார் தி வே ஆஃப் வாட்டர் படத்தின் டிக்கெட் புக்கிங் எப்போது தொடங்கும் என நெடு நாட்களாக காத்துக் கொண்டிருந்தனர். டிக்கெட் புக்கிங் ஓபன் செய்த சில மணி நேரத்திலேயே, பல பிரபல திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. குறிப்பாக, தென்னிந்தியாவில் அவதார் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு பெரிதாக அதிகரித்துள்ளது. இதனால், அவதார் இரண்டாம் பாகத்தின் ஒரு டிக்கெட்டின் விலை குறைந்த பட்சம் 100 ரூபாயாகவும் அதிக பட்சம் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 


Also Read|Avatar Best Scenes: ஆரம்பம் முதல் க்ளைமேக்ஸ் வரை.. ரசிகர்களை வாவ் சொல்ல வைத்த அவதாரின் அளப்பரிய காட்சிகள்!


அவதார் படத்திற்கு பெரிய விலை கொடுத்த விநியோகிஸ்தர்கள்?


தென்னிந்திய திரையுலகம், எப்போதுமே VFX-ல் வரக்கூடிய மிகப் பிரம்மாண்டமான எண்டர்டெயினர் படங்களுக்கு ஆதரவு கொடுப்பதற்குத் தவறுவதில்லை. அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படமும்,சினிமா சந்தையில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவில் பல இடங்களில் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதியுடன் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் விநியோகஸ்தர்கள் மற்றும் எக்ஸிபிட்டர்ஸ் (exhibitors) அனைவரது கவனமும் படத்தின் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் வசூலின் மீதே உள்ளது.  




ஐந்து நாட்களுக்கு முன்புத் தொடங்கிய இந்தப் படத்தின் முன்பதிவுகள் எதிர்பார்த்ததை தென்னிந்தியாவில் நன்றாகவே உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாத் துறையைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் தங்களுடைய மாநிலங்களில் ‘அவதார் 2’ படத்தை வெளியிடுவதற்காக 100-150 கோடி ரூபாய் பணம் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இன்னும் இது குறித்த உறுதியான முடிவுகள் வெளியாகவில்லை என்றாலும் ‘அவதார் 2’ படத்தின் மீது ரசிகர்கள் வைத்துள்ள அதிகமான எதிர்பார்ப்பும் அவர்கள் காட்டும் ஆர்வமுமே இந்த முடிவை விநியோகஸ்தர்களை எடுக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.


’அவதார்2’ திரைப்படம் டிசம்பர் 16ம் தேதி வெளியாவதை முன்னிட்டு தென்னிந்திய மொழிகளில் பெரும்பாலான தியேட்டர் ஓனர்கள் இந்த படத்திற்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.