பிறந்த குழந்தை சேட்டை செய்தால் அதனை ‘சரியான வாலு’ எனக் கொஞ்சுவது வழக்கம். இங்கு ஒரு குழந்தை பிறக்கும்போதே வாலாகப் பிறந்துள்ளது.. புரியலையா!.. மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக அரிய நிகழ்வாக மெக்சிகோவில் ஒரு பெண் குழந்தை வாலுடன் பிறந்துள்ளது. அது 2 அங்குல நீளமுள்ள உண்மையான வால் என மருத்துவர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். இது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வால் இருப்பதைத் தவிர, குழந்தை முற்றிலும் ஆரோக்கியமாக உள்ளது. மேலும் வடகிழக்கு மெக்ஸிகோவில் உள்ள ஒரு கிராமப்புற மருத்துவமனையில் சி-பிரிவு மூலம் இந்த குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது.


பிறந்த குழந்தைக்கு மற்றபடி எவ்வித சிக்கலும் இல்லை மேலும் கருவூற்றிருந்த காலம் முழுக்க அந்தக் குழந்தையின் பெற்றோர் ஆரோக்கியமாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. 


 





சுமார் 5.7-சென்டிமீட்டர் நீளமுள்ள மற்றும் முடியால் மூடப்பட்டிருக்கும் வால் அவளது வால் எலும்பின் முடிவில் அதன் அடிப்பகுதியை சிறிது இடதுபுறமாக ஒட்டிக்கொண்டிருக்கிறது. டாக்டர் வாலை பரிசோதனை செய்தனர். எக்ஸ்ரே செய்ததில் வால் உள்ளே எலும்பு அமைப்பு போன்ற முரண்பாடான விஷயம் எதுவும் தென்படவில்லை என்றும் வெறும் தேவையற்ற சதை வளர்ப்பு மட்டுமே அது என்றும் உறுதிபடுத்தியுள்ளனர். 


"இந்த வால் திசு மற்றும் கொழுப்பை மட்டுமே உள்ளடக்கிய ஒரு தீங்கற்ற இணைப்பாகும், இது மிகவும் அரிதானது, உள்ளூர் அளவில் 40 கேஸ்கள் மட்டுமே இதுபோலப் பதிவாகியுள்ளன” என்று மருத்துவமனையின் இணையதளம் உறுதிபடுத்தியுள்ளது.


இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மருத்துவர்கள் சிறிய அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் உடலில் ஒட்டியிருந்த வாலை அகற்றினர். குழந்தைக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை, அதே நாளில் மருத்துவமனையில் இருந்து குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.


உள்ளூர் செய்தித்தாளின் ஒரு தகவலின்படி, 2017ம் ஆண்டு வரை பிறந்த குழந்தைகளில் வால்கள் வளர்வது 195 நிகழ்வுகள் மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பதிவானவற்றிலேயே மிகப்பெரிய கேஸானது ஒரு நபரில் சுமார்  20 செண்டி மீட்டர் வரை வால் வளர்ந்திருந்தது அது மட்டுமே எனத் தெரியவந்துள்ளது. 


இந்த முரண்பாடு பெரும்பாலும் சிறுவர்களில் மட்டுமே காணப்படுகிறது. வால் உள்ள குழந்தைகளில் 17ல் ஒரு குழந்தை மூளை அல்லது மண்டை ஓட்டின் வளர்ச்சி தொடர்பான கோளாறுகளையும் சந்திக்கிறது.


முன்னதாக 2021 ஆம் ஆண்டில் 12 செண்டி மீட்டர் நீள வாலுடன் பிறந்த பிரெசில் குழந்தைக்கு வாளில் பந்து போன்ற அமைப்பு தென்பட்டது குறிப்பிடத்தக்கது.