தெலுங்கு படவுலகின் சூப்பர் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் நடிகர் ராம்சரண். இவர், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருடன் இணைந்து தன்னுடைய 15ஆவது படத்தில் நடித்து வருகிறார்.


ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக RC15 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.


தயாரிப்பாளர் தில் ராஜூவின் 50வது திரைப்படமான இதற்கு இசையமைப்பாளராக இசையமைப்பாளர் தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு தமன் பிறந்த நாளில் வெளியானது


இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராம்சரணுடன் வினயவிதேயராமா படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். ராம்சரண், கியாரா அத்வானி, ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


மேலும் வாசிக்க: Annaatthe Review: ரஜினியின் வெறித்தனமான எனர்ஜி ப்ளஸ்.. வில்லன் யாரு ஜெகபதி பாபுவா? சிவாவா?




இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, சதாரா மற்றும் பால்டன் ஆகிய இடங்களில் RC15 படத்தின் முதல் கட்டபடப்பிடிப்பு முடிந்துள்ளது. இப்படத்தின் பிரமாண்ட சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஷங்கர் தலைமையிலான ஒட்டுமொத்த நடிகர்களும், படக்குழுவினரும் படமாக்கப்பட்ட காட்சிகளை பார்த்துவிட்டு திருப்தியில் இருக்கின்றனர்.


Justice Chandru: Jai Bhim நீதிபதி சந்துரு செய்த சம்பவம்.. கடிதம் எழுதிய கருணாநிதி!


முன்னதாக, ராஜமவுலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண் நடித்திருந்தார். அப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.  இதற்கிடையே அப்படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இந்தியாவின் இரண்டு பிரமாண்ட இயக்குநர்கள் என புகழப்படும் எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் ஷங்கர் ஆகிய இரண்டு பேரின் இயக்கத்திலும் நடித்துவிட்டால் ராம்சரண் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண  


 


 


Tambaram Corporation: மாநகராட்சி ஆனது தாம்பரம்.. அவசரச் சட்டம் பிறப்பித்த தமிழ்நாடு அரசு!