நடிகை ராஷ்மிகா மந்தனா, கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தாலும், அவரை டாப் ஹீரோயின் ஆக்கியது ஆக்கியது தெலுங்கு படங்கள் தான். தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களின் மூலம் தான் தென்னிந்தியா முழுவதும் பேமஸ் ஆனார் ராஷ்மிகா.



வாரிசு


இதையடுத்து கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு வெளியான சுல்தான் படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்த அவர், தற்போது தளபதி விஜயுடன் வாரிசு திரைப்படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்தப் திரைப்படத்தில் மிகவும் தைரியமான கதாபாத்திரத்தில், குடும்பத்தினர் மீது மிகவும் பாசம் வைத்துள்ள ரோலில் நடித்துள்ளாராம் ராஷ்மிகா. படத்தில் விஜய்க்கு இரண்டு ரோல் உள்ளதாக கூறப்படும்நிலையில், ராஷ்மிகா யாருக்கு ஜோடியாகியுள்ளார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்: 'சூர்யா விருது வாங்குவார்னு ஜோசியர் சொன்னபோது சிரிச்சேன்’ - சிவக்குமார் பகிரும் சம்பவம்!


பான் இந்திய நடிகை


அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் பான் இந்தியா நடிகையானார் ராஷ்மிகா. இந்த திரைப்படத்திற்குப் பின்னர் இவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் ஏராளமாக குவிந்து வருகின்றன. அதில் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்து ரிலீஸ் தேதியே அறிவிக்கப்பட்டு விட்டது. அதன் மூலமாக ராஷ்மிகா பாலிவுட்டில் அறிமுகமாகப்போகும் நாள் தெரியவந்துள்ளது.



'குட் பை' ரிலீஸ் தேதி


நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நீனா குப்தா ஆகியோருடன் 'குட் பை' என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் ராஷ்மிகா நடித்து முடித்துள்ளார். இந்தப் திரைப்படம் காமெடி களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தப் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர். விகாஷ் பால் இயக்கியுள்ள இந்த திரைப்படம் அக்டோபர் 7ம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ராஷ்மிகாவின் பாலிவுட் என்ட்ரி அக்டோபர் 7 ஆம் தேதி நிகழப்போகிறதென ரசிகர்கள் இப்போதே ஃபயர் விடத் துவங்கி உள்ளனர்.


மிஷன் மஜ்னு


ஆனால் இந்த படத்திற்கு முன்னதாகவே, அவர் கமிட்டானது மிஷன் மஜ்னு படம்தான். சித்தார்த் மல்ஹோத்ரா இயக்கத்தில் அவர் இந்தப் படத்தில் நடித்துள்ளார். ஆனால் முதலில் குட்பை திரைப்படம் வெளியாகவுள்ளது. தொடர்ந்து ரன்பீர் கபூருடன் 'அனிமல்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். முதல் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே பாலிவுட்டில் பிசியான நடிகையாக மாறியுள்ளார் ராஷ்மிகா.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.