கட்டிடக்கலையில் சிறந்து விளங்கியவர்கள் முகலாயர்கள். தாஜ்மஹால், குதுப்மினார் அடுத்து ஒரு நினைவு சின்னமாக டெல்லியின் மெஹ்ரவுலி பகுதியில் உள்ள ஜமாலி கமாலி மசூதி. முகலாய கட்டிடக்கலைக்கு அடித்தளமாக விளங்கியது இந்த மசூதி என கூறப்படுகிறது. ஈடுபாடுகள் மத்தியில் இந்த கட்டிடம் உயர்ந்து நின்றாலும் காலப்போக்கில் தன் பொலிவை இழந்துவிட்டது. மேலும் அங்கு சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடைபெறுவதாக கூறி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்துகிறது. மக்கள் அங்கு ஆவிகளின் நடமாட்டம் இருப்பதாக நம்புகிறார்கள்.

 




கட்டுக்கதைகளின் உச்சக்கட்டம் :


வரலாற்றில் ஜமாலி கமாலி மசூதி பற்றி பல பெருமையான தகவல்கள் இருந்தாலும் தற்போது பேசப்படும் பேய் கதைகளால் அவை கடந்த காலத்தின் கதையாக மாற்றப்பட்டுள்ளன.  இந்நிலையில்  இரவு நேரங்களில் சில சமயங்களில் வித்யாசமான ஓசைகள், விலங்குகளின் அழுகை குரல், வெளிச்சங்கள் தோன்றி மறைதல், அருகில் யாரோ நிற்பது போன்ற உணர்வு, தூண்களுக்கு பின்னல் யாரோ நின்று எட்டிப்பார்ப்பது போல உணர்வு ஏற்படுவதாகவும், தேடி பார்த்தால் யாரும் இருப்பதில்லை என்றும் பல விசித்திரமான நிகழ்வுகள் நடக்கின்றன என கூறப்படுகிறது.

 

சில இன்னும் ஒரு படி மேல சென்று கண்ணனுக்கு தென்படாத ஏதோ ஒரு தீய சக்தி தங்களை அறைந்ததாகவும் கூறுகிறார்கள். இது புறம் இருக்கையில் ஜமாலி கமாலி மசூதியில் பாதுகாவலராக இருப்பவர்தான், காலை முதல் இரவு வரை அங்கே பணியாற்றுவதாகவும் இதுவரையில் எந்த ஒரு அமானுஷ்ய செயல்களையும் உணர்ந்ததில்லை என்று கூறுவதாக பதிவுகளில் உள்ளது.

 





மனிதர்களின் சூழ்ச்சி :

பேய் கதைகள் என்று ஒன்று இல்லாத போது இவை அனைத்தும் பேய்கள் செய்யும் வேலையை போல் அல்லாமல் மனிதர்களால் உருவாக்கப்பட்டுள்ள கட்டுக்கதைகள் போலவே உள்ளன. சுற்றுலா பயணிகளுக்கு ஒரு திகிலான அனுபவத்தை கொடுத்து அதன் மூலம் சம்பாதிக்கும் நோக்கத்திகேயே இது போன்ற அழிவு செயல்களை சுயநலத்திற்காக செய்கின்றனர். இது போன்ற பொய் காரணங்களால் அழகான நினைவு சின்னம் பூட்டப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் மசூதியில் செய்யப்படும் தொழுகை கூட தடை செய்யப்பட்டுள்ளது. முகலாய கட்டிடக்கலைக்கு மிக பெரிய சான்றாக விளங்கிய ஜமாலி கமாலி மசூதி மற்றும் கல்லறை இன்று யாரும் சென்று பார்வையிட இயலாத பயம் மிக்க ஒரு இடமாக மாற்றப்பட்டுள்ளது.