பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை ஏன் என்று கேள்வி எழுப்பிய நெட்டிசனுக்கு நடிகை குஷ்பு பதிலளித்துள்ளார்.


பிரபல நடிகையான குஷ்பு, அண்மையில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இதைப்பார்த்த நெட்டிசன் ஒருவர், “நன்றாக இருக்கிறது, ஆனால் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் பிற தோல் திருத்தங்கள் ஏன் ? உங்களின் நல்ல தோற்றத்துடனேயே நீங்கள் அழகாக வயதாகலாம்.” என்று பதிவிட்டார்.






இதற்கு பதிலளித்த நடிகை குஷ்பு, “ நீங்களா அதற்கு பணம் கொடுத்தீர்கள்..? மற்றவர்களை துன்புறுத்தி கிடைக்கும் இன்பத்தில் அப்படி உங்களுக்கு என்ன கிடைக்கிறது என்று தெரியவில்லை.. உங்களை நினைத்து நான் அவமானப்படுகிறேன்” என்று பதிவிட்டு இருக்கிறார். இந்தப்பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


 




தமிழ்நாடு கதாநாயகிகளை விட  வெளி மாநிலத்திலிருந்து வருபவர்கள்தான் அதிகம் கொண்டாடப்படுகிறார்கள். அதுபோல் 1980க்குப் பிறகு கொண்டாடப்பட்ட நடிகை தான் குஷ்பூ. இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளிவந்த வருஷம் 16 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் குஷ்பூ.


தொடர்ந்து அவர் நடித்து வந்த படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார். அவர் அழகான முகத்தோற்றமும், கொழு கொழு  கன்னமும் ரசிகர்கள் மத்தியில் ஆழப் பதிந்தது. இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியான சின்னத்தம்பி திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் இவர் பெயர் பரவ ஆரம்பித்தது. 


இப்படி கவரப்பட்ட குஷ்புவுக்கு ரசிகர்கள் அப்போதே கோயிலும் கட்டினர். மல்லிகை பூ போல் இட்லி இருக்க வேண்டும் என்ற பேச்சு மாறி, குஷ்பூ இட்லி என்று பரவலாகப் பேசப்பட்டது, இன்றளவும் பேசப்பட்டு தான் வருகிறது. தொடர்ந்து ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இதனையடுத்து பிரபல இயக்குநர் சுந்த சி திருமணம் செய்து கொண்ட சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி, சின்னத்திரை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தினார். தொடர்ந்து அரசியல் பக்கமும் கவனம் செலுத்தினார். இதனிடையே உடல் எடை அதிகமானதையடுத்து, கடினமான உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்தார்.