73 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்த்


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தன் 73வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அபூர்வ ராகங்கள் படத்தின் மூலமாக அறிமுகமாகி வில்லன் கதாபாத்திரங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த ரஜினிகாந்த், இந்திய சினிமாவின் முதல் கருப்பு நிற ஹீரோவாக முள்ளும் மலரும் படத்தின் மூலம் அறிமுகமானார். ஐந்து தசாப்தங்களாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் ராஜ்ஜியம் செய்துவரும் ரஜினிகாந்த் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் பலவேறு முன்னோடியான முயற்சிகளை செய்ததற்காக திரையுலகினரால் கொண்டாடப் படுகிறார்.

ஒரு நடிகர் நடித்த படம் தோல்வியடைந்தால் அதில் ஏற்பட்ட நஷ்டத்தில் நடிகரும் பங்கெடுத்துக் கொள்ள ண்டும் என்று காட்டியவர் ரஜினி. பாபா திரைப்படத்தின் தோல்வியைத் தொடர்ந்து அந்தப் படத்தால் நஷ்டம் ஏற்பட்ட விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி தந்தார் ரஜினி. அவரது இந்த செயல் இன்று வரை பல நடிகர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக இருக்கிறது


ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை



ரஜினியின் நெருங்கிய நண்பர் மற்றும் ரசிகரான திருப்பூர் சுப்ரமணியம் ரஜினி பற்றி இதே மாதிரியான ஒரு நிகழ்வை குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் நூறாவது படமாக உருவான ராகவேந்திரா படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்தப் படத்தை. கவிதாலயா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்தது. இந்தப் படத்தின் தோல்வியால் பெரும் பாதிப்பிற்குள்ளானது கவிதாலயா ப்ரோடக்‌ஷன்ஸ்.


தொடர்ந்து அடுத்த படமாக ரஜினியின் வேலைக்காரன் படத்தை தயாரித்தது. ராகவேந்திரா படத்தின் தோல்வியை ஈடுசெய்ய ரஜினிகாந்த் வேலைக்காரன் படத்திற்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் இல்லாமல் இந்தப் படத்தை நடித்து கொடுத்தார் என்று திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இன்றைய சூழலில் நடிகர்கள் தங்களது சம்பளத்தை தொடர்ச்சியாக உயர்த்தி வரும் நிலையில் ரஜினிகாந்த் ஒருவர் மட்டுமே தனது தகுதிக்கு ஏற்ப சம்பளத்தை நிர்ணயம் செய்கிறார் என்று திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.


தலைவர் 170


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது த. செ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் அமிதாம் பச்சன், ஃபகத் ஃபாசில் , ரித்திகா சிங், துஷாரா , மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். 


தலைவர் 171


இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். சன் பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சில காட்சிகள் ஐமேக்ஸின் படம்பிடிக்கப்பட இருப்பதாகவும், சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


மேலும் இந்தப் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரு அம்சங்களைக் கொண்டிருக்கும் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.


ALSO READ | Rajinikanth: ரஜினிக்கு 'சூப்பர்ஸ்டார்' பட்டம் எப்படி வந்தது? சூட்டியது யார் தெரியுமா?