மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் கன மழையால் பாதிக்கப்பட்ட 8 கிராம விவசாயிகளுக்கு விடுபட்டு போன நிவாரணத் தொகையை அரசிடம் இருந்து பெற்றுக் கொடுத்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதிக்கு விவசாயிகள் மேள வாத்தியங்கள் முழங்க சீர்வரிசை எடுத்து வந்து நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடின் கடைசி 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் முதல் ஆட்சியராக லலிதா ஐஏஎஸ் மாவட்டத்தை வரைவு செய்து தொடர்ந்து பொறுப்பு வகித்து வந்தார்.




இந்நிலையில் கடந்த பிப்ரவரி 5 -ம் தேதி  மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக, திருவள்ளூர் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றிய ஏ.பி.மகாபாரதி ஐஏஎஸ் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் பொறுப்பேற்ற முதல் நாளில் வேளாண் துறை அமைச்சருடன் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதித்த பயிர் பாதிப்புகளை இணைந்து பார்வையிட்டார். மேலும் பல தொடர்ந்து மாவட்டத்தில் பல அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்ட ஆட்சியர் மயிலாடுதுறை மாவட்ட மக்களின் நன்மதிப்பை பெற்று சிறப்பாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் பதவியேற்ற போது மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பருவம் தவறிய மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழிந்தது.


CM MK Stalin Letter: இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்




அதன் அடிப்படையில் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் பாதிக்கப்பட்ட நெற்பயிரிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. இதில் தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் தாலுகாவில் உள்ள கடக்கம், அகர ஆதனூர், பெரம்பூர், முத்தூர், அகர வல்லம், கிளியனூர் எடக்குடி, கொடை விளாகம் ஆகிய எட்டு கிராமங்களுக்கு பயிர் பாதிப்பிற்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. நிவாரணம் வழங்க கோரி பலமுறை மனு அளித்து விவசாயிகள் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.  தொடர்ந்து விடுபட்டு போன 8 கிராம விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில் விடுபட்டு போன மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த எட்டு கிராம விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை மற்றும் உளுந்து பயிர்கள் நிவாரணம் என 5 கோடி 86 லட்சம் ரூபாய் சமீபத்தில் அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.


Mahua Moitra: எம்.பி. பதவி பறிப்பு; சட்ட போராட்டத்தை தொடங்கிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மொய்த்ரா




தமிழக அரசிடம் இருந்து நிவாரணத் தொகையை பெற்று தர உறுதுணையாக இருந்த மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு தெரிவித்து நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் மேளதாள வாத்தியங்கள் முழங்க சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக வந்து  ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதிக்கு நன்றி தெரிவித்தனர். ஆட்சியருக்கு கேடயங்கள் மற்றும் சால்வை அணிவித்து விவசாயிகளின் உற்ற நண்பனாக இருக்கும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதிக்கு சிலை வைப்போம் என்று கூறி விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் வெள்ள நிவாரண நிதியாக பத்தாயிரம் ரூபாய் தொகையினை விவசாயிகள் ஒன்றிணைந்து வழங்கினர்.


Ayodhya Ram Temple: ராமர் கோயில் திறப்பு விழா! பல கோடி இந்துக்களின் கனவு நனவாகியுள்ளது - கே.சி.ஆர். மகள் கவிதா