பொங்கல் பண்டிகைக்கு பயன்படுத்தப்படும் செங்கரும்பு வகைகள் மதுரை மாவட்டம் மேலூர், சிவகங்கை மாவட்ட பகுதியில் இருந்து அதிகளவு விளைவிக்கப்படுகிறது. இந்த பகுதி மண்களில் விளைவிக்கப்படும் கரும்பின் சுவை அதிகமாக இருக்கும். இந்நிலையில் இடையமேலூர் அருகே உள்ள சாலூர் பகுதியில் விளைவிக்கப்படும் கரும்புகள் சூறாவளி காற்றில் சாய்ந்தது விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு சாய்ந்த கரும்புகளுக்கு நிவாரணம் வழங்கி விவசாயிகளின் நிலையை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
வருவாய் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்து சென்றுள்ளதாகவும் இன்று வரை இழப்பீடு வழங்கவில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே உள்ளது சாலூர், கிராமம் உள்ளது இங்கு விவசாயமே பிரதான தொழிலாகும் இக்கிராம மக்கள் நெல், வாழை, கரும்பு, தக்காளி, வெண்டை, கத்திரி, கீரை ,உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை, இடையமேலூர், சாலூர், மேலச்சாலூர் கீழச்சாலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் இடையமேலூர், சாலூர் பகுதியில் சுமார் 30 ஏக்கருக்கு மேல் விளைவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான, கரும்புகள் சாய்ந்ததுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு சுமார் ஒரு லட்சம் வரை செலவு செய்துள்ளதாகவும் திடீரென வீசிய சூறைக்காற்றால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சாய்ந்த கரும்புகளை மீண்டும் கயிறு வைத்து கட்டி நிமிர்த்து வைத்துள்ளனர்.
- சென்னையில் மழைநீர் வடிகால் பணியை 10% கூட திமுக அரசு முடிக்கவில்லை - ஆர்.பி. உதயகுமார்
ஆனாலும் அந்த கரும்புகள் அனைத்தும் வெளிர் நிறத்தோடு காணப்படுகின்றன தற்போது பொங்கலுக்கு ஒரு மாத காலமே உள்ள நிலையில் கரும்புகள் வளர்ச்சி அடையாமலும் நிறங்களும் மாறியிருப்பதாலும் கரும்புகளை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாகவும், வருவாய் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்து சென்றுள்ளதாகவும் இன்று வரை இழப்பீடு வழங்கவில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே முறையாக பரிசீலனை செய்து இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயி அழகர் சாமி நம்மிடம் கூறுகையில், ”காற்றடித்து கரும்புகள் சாய்ந்துவிட்டது அதனை கயிறு மூலம் கட்டி வைத்துள்ளேன். சாய்ந்தது குறித்து அதிகாரிகள் போட்டோ எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் அதற்கு பின் நடவடிக்கை இல்லை. எனவே அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.