கர்நாடகா எல்லையின் நாச்சிக்குப்பத்தில் உள்ள தனது தாய், தந்தையின் நினைவிடத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது சகோதரருடன் இணைந்து அஞ்சலி செலுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகில் இருக்கும் நாச்சிக்குப்பத்தை சேர்ந்த ரானோஜிராவ், பெங்களூரை சேர்ந்த ராம்பாயை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரஜினிகாந்த், சத்திய நாராயணன் பிறந்த பிறகு குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வந்தனர். எனினும், அடிக்கடி சொந்த ஊரான நாச்சிக்குப்பத்துக்கு ரஜினி சென்று வந்து கொண்டிருந்தார்.
தாய், தந்தையின் மறைவுக்கு பிறகு அவர்களுக்கு நாச்சிக்குப்பத்தில் நினைவு மண்டபத்தை ரஜினியின் அண்ணன் அமைத்துள்ளார். அண்மையில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை முடித்து கொண்ட ரஜினி இமயமலையின் ஆன்மீக பயணம் சென்றார். அங்கிருந்து திரும்புகையில், வட மாநிலங்களில் இருக்கும் கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
நேற்று பெங்களூருவுக்கு சென்ற ரஜினி தான் முன்பு நடத்துநராக வேலைப்பார்த்த அந்த பேருந்து நிலையத்துக்கு சென்று, அங்கிருந்த நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களை சந்தித்து பேசினார். பின்னர் தனது அண்ணன் சத்திய நாராயணண் வீட்டில் இருந்த ரஜினி சாலை மார்க்கமாக சென்றுள்ளார். அப்பொழுது, நீண்ட நாட்களுக்கு பிறகு நாச்சிக்குப்பத்துக்கு வருகை தந்த ரஜினி, முதல் முதலாக தனது அவரது தாய், தந்தையின் நினைவிடத்தைதுக்கு சென்றார். நினைவிடத்தில் ரஜினியின் அண்ணன் அமைத்திருந்த பெற்றோரின் உருவ நிலையை பார்த்த ரஜினி, அவர்களுக்கு பூஜை செய்து மாலை அணிவித்து வழிபட்டார். ரஜினியுடன் அவரது சகோதரர் சத்திய நாராயணனும் உடனிருந்தார். தற்போது தாய் நினைவிடத்தில் ரஜினி மரியாதை செலுத்தும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்து வருகிறது. ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்தை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் ஜெயிலர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருந்தாலும், ரஜினி எந்தவித ஆரவாரமும் இன்றி ஆன்மீக பயணத்திலும், தனது நீண்ட கால நண்பர்களையும் சந்தித்து வருகிறார்.