சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் கிள்ளிவளவன் வந்து குணசேகரனையும் கதிரையும் மிரட்டுகிறார். "எல்லாரும் ஒண்ணா சேர்ந்து தான் பண்ணோம் ஏதாவது பிரச்சனை வந்தாலும் எல்லாரும் ஒன்னாக தான் அனுபவிக்கனும், என்னை மட்டும் மாட்டிவிட்டு நீங்க எஸ்கேப் ஆகலாம் என நினைச்சீங்க யார் கிட்ட என்ன சொல்லணுமோ அதை எல்லாத்தையும் சொல்லிட்டு எஸ்கேப்பாகி விடுவேன்" என சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார்  கிள்ளிவளவன்.



ஜான்சி ராணி குணசேகரன் வீட்டுக்கு வந்து மறுபடியும் ஆதிரையை அனுப்பச் சொல்லி பிரச்சனை செய்கிறாள். கரிகாலனையும் ஆதிரையையும் ஹனிமூனுக்கு அனுப்பி வைக்கிறேன் என சொல்லி ஜான்சி ராணியை ஆஃப் செய்து அனுப்பி வைக்கிறார் குணசேகரன். 


ஜனனியும் மற்றவர்களும் ஜீவானந்தம் வீட்டை கண்டுபிடித்து விடுகிறார்கள். வெண்பாவை பார்த்ததும் தாங்க முடியாமல் அவளை கட்டியணைத்து அழுகிறாள் நந்தினி. ஜீவானந்தம் இவர்கள் வந்ததை பார்த்து விடுகிறார். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. 


அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 



ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் பஞ்சாயத்து செய்து வைக்கிறார் குணசேகரன். ஆதிரை கரிகாலனோடு ஹனிமூன் செல்ல மாட்டேன் . எனக்கு அவன் வேண்டாம் என சொன்னதையே திரும்பி திரும்பி சொல்கிறாள். பயங்கரமா கத்தி கலாட்டா செய்கிறாள். இதை கவனித்த குணசேகரான அவர்களை அழைத்து "என்ன பிரச்சனை சத்தம் மேல வரைக்கும் கேட்குது" என்கிறார். "நான் தான் பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கேன்" என்கிறாள் ஆதிரை. "இந்த வீட்டு பொம்பளைங்களோட சேர்ந்துக்கிட்டு எனக்கு எதிரா ஒரு அடிஎடுத்து வைச்சன்னு வையேன்.. அப்புறம் உனக்கு பொண்ணு உயிரோட இருக்க மாட்டா" என விசாலாட்சி அம்மாவிடம் சொல்கிறார் குணசேகரன். அவர் அப்படி பேசுவதை பார்த்த ஆதிரை அழுகிறாள். 




ஜீவானந்தம் வீட்டில் ஜனனியும் ஈஸ்வரியும் வெண்பாவோடு பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஈஸ்வரியை பார்த்த வெண்பா அவள் அருகில் சென்று "நீங்க பார்க்க என்னோட அம்மா மாதிரியே இருக்கீங்க" என சொல்லவும் அவளை அழக்கூடாது என சமாதானம் செய்து கட்டியணைத்து கொள்கிறாள் ஈஸ்வரி. அந்த நேரத்தில் ஜீவானந்தம் அவர்களுக்கு குடிப்பதற்கு ஏதோ கொண்டு வருகிறார். வெண்பா சொன்னதை பார்த்து அவரும் சங்கடப்படுகிறார். இதுதான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட். 



ஜீவானந்தம் வீட்டுக்கு என்ன விஷயமாக ஜனனியும் மற்றவர்களும் சென்றார்களோ, அந்த காரியம் நடந்ததா? அப்பத்தா அங்கே இருந்தாரா? ஆதிரை என்ன முடிவு எடுக்கப்போகிறாள்? இந்த கேள்விகளுக்கான விடை இன்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோடில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.