‘83’ திரைப்படம் பிரமாதமாக உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் மொத்த படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார்.


1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை வைத்து 83 படம் தயாராகி உள்ளது. மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையில், பெரிய திரையில் வெளியிட வேண்டுமென காத்திருந்து டிசம்பர் 24-ம் தேதி தியேட்டரில் வெளியானது. கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரது வரவேற்பையும் பெற்றிருக்கிறது 83 திரைப்படம். 83 Movie Review: கோப்பையை வென்ற கபில், மனதை வென்றாரா? சுடச்சுட ‛83’ ரிவியூ!


படத்தின் முதல் நாள் காட்சியை படத்தின் ரியல் மற்றும் ரீல் நட்சத்திரங்கள் திரையரங்கிற்கு சென்று ஒன்றாக பார்த்துள்ளனர். படத்தைப் பார்த்த ரியல் இந்திய அணி வீரர்கள் படக்குழுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். தற்போது தமிழ் கிரிக்கெட் வர்ணனையில் பிஸியாக இருக்கும் ஸ்ரீகாந்த்தான், 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஒரே தமிழக வீரர். படத்தில்  சீக்காவாக நடித்திருக்கும் ஜீவா அப்ளாஸ் வாங்குகிறார். ஒரு குறிப்பிட்ட காட்சியில், காமெடி, அழுகை என எமோஷன்கள் மாறி மாறி வந்தாலும் கச்சிதமாக நடித்திருக்கிறார். படத்தை பார்த்த பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். Watch Video: கபில்தேவை கவுரவிக்கும் ஐசிசி... 1983 உலகக்கோப்பை கிளாசிக் வீடியோ வெளியீடு!


அந்த வகையில், எந்தப் படம் பார்த்தாலும், அது தனக்கு பிடித்திருந்தால் உடனையே பாராட்டும் ரஜினிகாந்த், தற்போது 83 திரைப்படத்தையும் பார்த்துள்ளார். இதுகுறித்து ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில்,  “83 என்ன ஒரு திரைப்படம். படம் பிராமதமாக உள்ளது. தயாரிப்பாளர்கள், இயக்குநர் கபீர் கான், கபில்தேவ், ரன்வீர் சிங், ஜீவா மற்றும் அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.  83 Movie Review | திரைகளில் சிக்ஸர் அடித்திருக்கிறதா கபில்தேவ் அணி? - 83 ரிவியூ!






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண